Home / eBooks / A Separation
A Separation eBook Online

A Separation (எ செப்பரேசன்)

About A Separation :

விவாகரத்து பல காரணங்களுக்காக நடக்கிறது. ஆனால் இந்த சமுதாயம் காரணம் என்று, நடத்தை, தீய பழக்க வழக்கம், அடித்து துன்புறுத்துதல், பணப்பிரச்னை போன்றவற்றை மட்டுந்தான் எடுத்துக் கொள்கிறது.

இப்படியான பிரச்னை எதுவுமேயில்லாமல், இந்த திரைக்கதையில் ஒரு விவாகரத்து நீதிமன்றத்திற்கு வருகிறது. அதன் நியாயங்கள் அதற்கான நியாயங்கள் கொண்டவை. மதிக்கப்பட வேண்டியவை. அந்த தம்பதியர் இருவரும் நடந்து கொள்கிற விதம் எல்லோர் மனதிலும் அவர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்து விடுவது நிஜம்.

ஒரு உறவை தக்க வைக்க ஆதாரமாய் அந்த உறவிற்கிடையே புரிதலும், ஈர்ப்பும் அத்தியாவசியமாகிறது என்பதை இந்த சமூகம் பெரிதாய் காதில் போட்டுக் கொள்வதில்லை. மேலை நாடுகளில் இரண்டாம் உலகப்போரின் போது ஆண்கள் நிறைய பேர் இறந்து போனார்கள். பெண்களை தொழிற்சாலைகளுக்கு முதலாளிகளே விரும்பி அழைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்படித் தான் மேலை நாடுகளில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, கையில் நாலு காசு பார்த்து, படித்து, வெளியுலகம் அறியத் துவங்கி, பொருளாதார தன்னிறைவடைந்து, சொந்தக்காலில் நிற்க பழகி, கற்பு என்கிற உடல் அரசியல் தந்திரத்தை உடைத்தெறிந்து, ஆணுக்கு இணையாக பெண்கள் கோலோச்சத் துவங்கியது அதன் விளைவாக தான்.

அந்த காலக்கட்டத்தில் மாறிவரும் பெண் உலகை சரிசமமாக நடத்த மனமில்லாமலும், அந்த மாறுதலை புரிந்து கொள்ள இயலாமலும் ஆணுலம் அதிர, மனமுறிவு அதிகரிக்க ஆரம்பித்தது. அப்போது கம்யூனிஸ தலைவர் லெனின் சொன்னார். இது மாற்றத்தின் அறிகுறி. பெண்களின் வளர்ச்சிக்கான அடையாளம். ஒட்டுமொத்த சமுதாயத்தக்குமான மறுமலர்ச்சி. இது அதிகரித்து பின் இருபாலருக்கும் இடையில் எல்லாவிதத்திலும் ஒரு சமண் எட்டியதும், புரிதல் அதிகரித்து பின் மட்டுப்படத் துவங்கி விடும் என்றார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒரு கதையிலும் இப்படியொரு காட்சி வரும். கணவனும், மனைவியும் வழக்கறிஞரிடம் விவாகரத்து கேட்டு வருவார்கள். அவரும் இதே மாதிரி காரணம் கேட்பார். அதற்கு அந்த கணவன் இப்படிச் சொல்வான்.

எங்களுக்கிடையில பெருசா எந்தவித பிரச்னையும் இல்ல. ஆனா காதல் இல்ல. காதல் இல்லாம எப்படி ஒரு உறவுவை நினைச்சி பாக்க முடியும்... அதனால தான் பிரிஞ்சிடலாம்னு ரெண்டு பேருமே சேந்து இந்த முடிவை எடுத்தோம் என்பார்.

இதில் மதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கும், பகுத்தறிவு சார்ந்த வாழ்க்கை முறைக்குமான இடைவெளியில் துவங்கி, தொன்றுதொட்டு வருபவைக்கும் புதுமைக்குமான இடைவெளியில் நுட்பமாய் பயணிக்கிறது இந்த திரைக்கதை.

அஸ்கர் ஃபர்ஹாடி 1972-ல் ஈரானில் பிறந்தார். 1986-ல் யூத் சினிமா சொஸைட்டி ஆஃப் இஸ்பஹானியில் சேர்ந்து சினிமா கற்றார். 2011-ல் ‘எ செப்பரேஷன்’ படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்றார்.

நேசத்துடன், தி. குலசேகர்

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books