Home / eBooks / Aadhi Sankararin Aanma Bodham
Aadhi Sankararin Aanma Bodham eBook Online

Aadhi Sankararin Aanma Bodham (ஆதி சங்கரரின் ஆன்ம போதம்)

About Aadhi Sankararin Aanma Bodham :

இந்த உலகில் பிறந்துள்ள மனிதர்கள் எவருமே தாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் அல்லும் பகலும் உழைக்கிறார்கள். அதாவது, அவர்கள் தனது பணம், பதவி, புகழ் என்றவைகள் மூலம் அதை அடையலாம் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள். அவர்கள் அவைகளை அடையலாம் அல்லது அடையாமலும் போகலாம். ஒரு வழியாக அடைந்தாலும், அது அவர்களுக்குச் சிறிது காலம் மட்டுமே மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அவர்களது குறிக்கோளும் மாறுகிறது; முயற்சியும் தொடர்கிறது. இது போன்ற முயற்சிகளில் காலம் நழுவிக்கொண்டே செல்வதால், ஒரு கட்டத்தில் நிரந்தரமான இன்பநிலை அடைவது எப்படி என்று சிந்திக்கும்போது, ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்குத் தான் வெறும் உடலோ, மனமோ அல்ல; அதற்கும் நுண்ணியதான நிலையில் உள்ளோம் என்று தெரியவருகிறது. அவ்வாறான நிலைதான் அனைத்து சீவராசிகளுக்கும் உள்ள பொதுவான ஆன்ம நிலை என்பது புத்தி அளவில் முதலில் அறியப்படுகிறது. அது தெரியாமல் நம்மை மறைத்த திரைகள் எவை, அவைகளை எவ்வாறு நீக்கி தனது உண்மை நிலையை உணர்வது என்பதை அத்தகைய சாதகர்களுக்கு விரிவாக விளக்குவதே ஆன்மாவைப் பற்றிய இந்த நூல்.

About S. Raman :

இளங்கலையில் இயற்பியல் (Physics) முதுகலையில் மின்னணு (Electronics) முனைவர் பட்டமோ பேச்சை அறியும் கணினி வழிகளில் (Speech Recognition) என்பவைதான் இந்நூலாசிரியர் S. ராமன் சென்ற கல்வி வழி. இவை நடுவில் தமிழ் எங்கே வந்தது என்று கேட்டால், தான் பிறந்தது 1944-ல் தமிழ் நாட்டில் சங்கம் வளர்த்த மதுரையில், தொடக்கத்தில் தமிழிலேயே பயின்றும், பின்பு ஆங்கிலத்தில் படிப்பு தொடர்ந்தாலும் இளங்கலைப் படிப்பு வரை தமிழ் பயின்றதும் காரணமாக இருக்கலாம் என்பார். மேலும் தமிழ் பயின்ற ஆசிரியர்களில் முதன்மையானவர் “கோனார் நோட்ஸ்” புகழ் திரு. ஐயம் பெருமாள் கோனார் என்றால் அது போதாதா என்றும் சொல்வார்.

பெங்களூர் (I.I.Sc.) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திலும், பின்பு சென்னை (I.I.T.) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் ஆக நாற்பது வருடங்கள் பணி புரிந்து பேராசிரியராக 2006-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வித் தர நிர்ணயக் குழுக்களின் அழைப்புக்கு இணங்கி அவ்வப்போது பணியாற்றி வருகிறார்.

இவர் தனது இளம் வயதிலிருந்தே திருவண்ணாமலை தவச்சீலர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் போதனைகளில் மனம் சென்றவர். அன்னாரின் உரைகளைப் பற்றியும், அது தொடர்பானவைகளைப் பற்றியும் இவர் தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www.tamilhindu.com) 2010-ம் வருடத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். அவை தவிர தினசரி செய்திப் பத்திரிகையில் வரும் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்ப்பதும் இவரது இன்றைய பணிகளில் ஒன்று.

இவர் எழுதிய வால்மீகி இராமாயணச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பான “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு”, மற்றும் “இரமணரின் கீதா சாரம்” நூல்களை ‘இந்துத்துவா பதிப்பக’மும் , சுவாமி விவேகானந்தர் வழி நடந்து ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய, ஆஸ்திரேலியத் தமிழரான திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் வாழ்க்கை சரிதையான “இலக்கை எட்டும்வரை இடைவிடாது இயங்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை “கண்ணதாசன் பதிப்பக”மும் வெளியிட்டிருக்கின்றன. இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு ஸ்ரீ ரமண மகரிஷி இணைய தளத்தில் “அத்வைத ஞான தீபம்” என்று ஒளி வீசுகிறது.

தமிழ்க் கட்டுரைகள் எழுதுவது தவிர, தனது வீட்டு மாடியின் திறந்த வெளியில் இயற்கை உரம் தயாரித்து, செடிகள் வளர்ப்பதும் இவரது இன்னுமொரு ஓய்வுகாலப் பொழுதுபோக்கு.

Rent Now
Write A Review