ஆன்மிகம் என்பது பல நுண்ணிய அரிய கருத்துக்களை உள்ளடக்கிய பெரிய விருட்சம். ஒரு கருத்தை மட்டும் உள்ளடக்கியவை அல்ல. அன்று சமய சாஸ்த்திரங்கள், புராணக் கதைகள், தத்துவக் கருத்துக்கள், உபநிடதக் கருத்துக்கள் என்று பற்பல விஷயங்களை உடலுக்கும் உள்ளத்துக்கும் பலப்படுத்தும் அருமையான மருந்து என்றும் கூறலாம். அடியார்களின் செம்மை மொழிகள் நம்மை நல்வழிபடுத்துகின்றன. எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதையும் பாடம் புகட்டுக்கின்றன. அமுதம் என்பது சாவா மருந்து. ஆன்மிக அமுதம் நம்மை நீண்ட காலம் வாழ வைக்கும் சாவா மருந்து என்பது உண்மை.
படித்துப் பார்க்கும் வாசகர்கள் இந்த ஆன்மிக அமுதம் அருமையானது என்று உணருவீர்கள். படித்துத் தித்திப்பை உணரும் உங்களுக்கு என் நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
லட்சுமி ராஜரத்னம்.
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Rent Now