Home / eBooks / Aanmeega Muthukal
Aanmeega Muthukal eBook Online

Aanmeega Muthukal (ஆன்மீக முத்துக்கள்)

About Aanmeega Muthukal :

ஆன்மிகம் என்பது என்ன?

“ஒவ்வொரு மானிட நிகழ்வின் தெய்வீக அர்த்தத்தில் ஒவ்வொரு விழுமிய செயல் - எண்ணத்தின் உள்ளார்ந்த புனிதத்தின் மனப்பான்மையை 'ஆன்மிகம்' என நாம் பொருள் கொள்கின்றோம்; உலகாயத பயன்களைப் பொருட்படுத்தாது ஒவ்வொரு கடமையையும் நுட்பமான அறிவுடன் செம்மையாகச் செய்வதும், அனைத்திலும் உறுதியாக உள்ள ஒற்றுமை அம்சத்தை அறிவதும் ஆன்மிகம் ஆகும்” என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வழங்கியுள்ள தத்துவ வாக்காகும்.

‘ஆன்மிகம்' இது நாடு கடந்து, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் (எண்ணிக்கை 100ஐத் தாண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம்) ஒவ்வொரு தெய்வத்தை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்களை அல்லது உருவமற்ற ஒன்றை வழிபாடு செய்து மனநிறைவு பெறுவதோடு, மேன்மைகளையும் பெற்று வருகிறது. ஆனால் அனைத்து மதங்களும் ஒன்றே போல் வற்புறுத்துவது இதைத்தான். 'தன் ஆணவத்தை நீக்கி மனித நேயம் பூண்டு பிற உயிர்களிடம் அன்பு செலுத்து' என்பதைத்தான். இக்கொள்கையில்லாத மதம் ஏதுமில்லை!

நம்முடைய இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்களை வழிபடுகின்றோம். அந்தந்த இறைவன் எடுத்த அவதாரங்கள், பிற கடவுள்கள் ஆகியவர்களைச் சுற்றி தொன்று தொட்டு கூறப்படும் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள், சம்பவங்களை நாம் வழிபடுவதை ஏற்றுக் கொண்டு நம்பி, நம் வழிபாடுகளை முன்னோர்கள் வகுத்துள்ள முறைகளில் இன்றுவரை பக்திபூர்வமாக செய்து வருகிறோம். பழமை பொருந்திய அர்த்தமுள்ள இந்துமதம் குறித்தான ஆயிரக்கணக்கான அரிய விஷயங்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியாமல் இருப்பதற்குக் காரணம் - அதனை சரிவர எடுத்துச் சொல்லும் உறவு நட்பு வட்டங்கள் இல்லாமல் போனதுதான்!

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் இந்து மதம் குறித்து கேட்டுக் கொள்ள இளம் தலைமுறையினருக்கு நேரம் இருப்பதில்லை. அதுதவிர அவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இல்லப் பெரியோர் சூழ்நிலைகள் காரணமாக கூட்டுக் குடும்ப முறையை விட்டு விலகி தனித்தோ அல்லது முதியோர் இல்லங்களிலோ வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

அதனால் வீட்டு சிறுவர், சிறுமிகளுக்கு நம் மதம் கொண்ட சிறப்பு, தெய்வ, ஆகம விஷயங்கள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், ஆலயக் கட்டமைப்பு, சிற்ப விஷயங்கள், கோவில்கள் கொண்டுள்ள புராண, வரலாற்றுப் பின்னணிகள் போன்றவற்றை அறியும் வாய்ப்பு அடியோடு நழுவி விடும் நிலை உருவாகி விட்டது. இருந்தாலும் அந்நிலை ஓரளவு நீங்கும் விதமாக ஆலயங்கள், பொது இடங்களில் ஆன்மீகப் பெரியவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள், நூல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், கணினி கருவிகள் இவைகள் மூலமாக தெய்வீகத்தலங்கள் பொது மக்களை அடைந்துதான் வருகின்றன.

இந்த அடிப்படையிலேயே, எனக்குத் தெரிந்த, யான் கற்ற பல ஆன்மீகத் தகவல்களை, நூல் படிப்போரின் மனதில் பட, இந்த முறையில் கூறினால் ஏற்புடையதாக அமையும் என்ற எண்ணத்தில் இந்நூலை எழுதியிருக்கின்றேன்.

'ஆன்மிக முத்துக்கள் அறுநூறு' என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்களால் வரவேற்கப்பட நான், போற்றி வணங்கும் வயலூர் முருகன், ஷீர்டி பாபா, காஞ்சி மகாப் பெரியவாள் ஆகியோர்களின் ஆசிகளை வேண்டுகின்றேன்.

இனி நீங்கள் நூலைத் தொடர்ந்து படிக்க அன்புடன் வழிவிடுகின்றேன்.

- ஆரூர் ஆர்.சுப்பிரமணியன்

About Aroor R. Subramanian :

திரு. ஆர்.சுப்பிரமணியன், திருவாரூர் - விஜயபுரத்தில் 18.12.1940 அன்று பிறந்தார். இவரது தந்தை திரு. உமா மகேஸ்வரன் என்ற ஏ. இராமய்யர். பூர்வீகமாகத் திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தமாக திருவாரூரில் குடியேறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 4 ஆம் தொகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவகலகத்தில் இளநிலை உதவியாளராக (அப்போது லோயர் டிவிஷன் கிளார்க்) 1.6.1960 அன்று தனது 19 வயதே முடிந்த நிலையில் பணியில் சேர்ந்தார்.

அவர் சேர்ந்த துறை வருவாய்த்துறை. அத்துறையில் பல பயிற்சிகளும், பலதுறைத் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகளும் உண்டு. அவைகளை எல்லாம் குறுகிய காலத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார். அத்துறையில் வருவாய் ஆய்வாளர், உதவியாளர். தலைமை எழுத்தர், தலைமைக் கணக்கர், துணை வட்டாட்சியர், சிறப்பு நீதிபதி, வட்டாட்சியர், காஞ்சிபுரம் வரவேற்பு வட்டாட்சியர், (மீனம்பாக்கம் விமான நிலையம் உட்பட ) நிலமேலாளர், சிறப்புத் துணை ஆட்சியர், என்று துறையிலுள்ள எல்லா நிலைகளிலும் பணியாற்றி சென்னை, கலால் உதவி ஆணையராகப் பணியாற்றும் போது 31.5.1999 அன்று பணி நிறைவு ஓய்வு பெற்றார்.

Rent Now
Write A Review

Same Author Books