Home / eBooks / Aarumuga Aravam
Aarumuga Aravam eBook Online

Aarumuga Aravam (ஆறுமுக அரவம்)

About Aarumuga Aravam :

புஜங்கம் என்றால் பாம்பு என்று பொருள். சம்ஸ்கிருதத்தில் செய்யுட்களைப் புனையும் ஓசைநயங்களில் (ஸ்வரங்களில்) புஜங்கமும் ஒன்று. அதற்கேற்ப, சுப்ரமண்ய புஜங்கம் பாடல் முழுவதுமே, ஓர் அரவம் (பாம்பு) வளைந்து நெளிந்து சரசரவெனச் செல்வதைப் போன்ற அரவம் (ஓசை) கொண்டது. மேலும், பாம்பு என்பது குண்டலினி சக்தியின் உருவகம். சுப்ரமண்யனோ, தனது அன்பர்களின் குண்டலினி சக்தியை மேலோங்கச் செய்யும் யோகீஸ்வரன். அதேநேரத்தில் புஜ + அங்கம் என்பதால் புஜங்கம் என்றும் ஒருசிலர் பொருள் கூறுவர். அதன்படி, ஸ்கந்தனின் கந்தங்களில் (தோள்களில்) சூடப்பட்ட பெருமை கொண்டது என்றும் இந்தப் பாமாலையைக் குறிப்பிடலாம். திருச்செந்தூரில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஆசுகவியாய் இந்தப் பாடலைப் பாடியபோதே, அவருக்கு சுப்ரமண்யக் கடவுள் பிரத்யட்சமானார் என்பது ஆன்றோர் கருத்து. அந்த ஜகன்மோகனனின் அருளாலும், ஜகத்குருவின் ஆசியாலும் என்னால் இயன்றவரை மூலஸ்லோகத்தை ஒத்த ஓசைநயத்தையும், பொருள்நயத்தையும் தமிழில் கொண்டுவர முயன்றுள்ளேன்.

About Padman :

பத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத் துறையில் 30 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர். தினமணி நாளிதழ், சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, வின் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திப் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

கடந்த 2005-இல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் என்ற நூல், சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது.

திக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே, தத்துவ தரிசனம், முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு), கருணைக்கு மறுபெயர் கசாப் (கட்டுரைத் தொகுப்பு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி, பொருள் தரும் குறள் உள்ளிட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கரின் “Six Epochs of Indian History” நூலை, “பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்” (விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு) என்ற தலைப்பில் அண்மையில் மொழிபெயர்த்துள்ளார்.

கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். வணிகம் வசப்படும், செல்வம் வசமாகும் உள்ளிட்ட நேரலை முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நெறியாளர்.

அன்பு பாலம் அமைப்பிடமிருந்து பன்முக ஊடகவியலாளர் விருது (2009), புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் இதழியல் சுடர் விருது (2015), விஸ்வ சம்வாத் கேந்திரா அமைப்பிடமிருந்து சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது (2017), சிவநேயப் பேரவையின் தமிழறிவன் மாமணி விருது (2017) உள்ளிட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Rent Now
Write A Review