“காவிரி நனைத்துச்சோறுடைத்த சோழ தேசம்…”
அந்தப்பொன்னி நதியாலேயே காப்பற்றப்பட்டதாகச்சொல்லப்படும் பொன்னியின் செல்வன் என்றும் அருள் மொழி வர்மன் என்றும் பேர் பெற்ற உடையார் ராஜராஜ சோழன்….
ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் தமிழ் நாகரீகத்தை உலகுக்குப்பறைச் சாற்றிக் கொண்டிருக்கும் கற்றளி…”
ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப்பெரிய கோவில்…
இதை வைத்து பேராசிரியர் கல்கியும் பாலகுமாரனும் மாபெரும் சரித்திர நவீனங்களை நமக்குத் தந்திருக்கின்றனர். அவர்கள் போட்டுக்கொடுத்த ராஜ பாட்டையில் நானும் ஒரு சின்ன முயற்சி செய்திருக்கிறேன்.
தஞ்சைப்பெரிய கோவிலின் ஏதோ ஒரு வாசல் கோபுரத்தில் தொப்பி போட்ட ஆசாமியின் சிலை இருப்பதைப்பார்த்திருக்கிறீர்களா?
சரி, பார்க்காவிட்டாலும் பாதகமில்லை. அட்டையில் ஃபோட்டோவையாவது பார்த்துத்தொலைத்துவிட்டு இந்தக்கதைக்குள் புகுந்து சரித்திர அமுத்தை நுங்குங்கள்!!
யார் இந்த தொப்பி ஆசாமி?
நம் நூற்றாண்டுத்தொப்பி அணிந்த இவன் உருவம் எப்படி அன்றே செதுக்கிய சிலையில்..?
இந்த முடிச்சைப்பிடித்து யோசித்து கற்பனையில் எழுப்பப்பட்டதே இந்த குறுங்கதை.
”ஏன்யா சரித்திரக்கதைங்கறே! அதுக்கு ஆதாரம், சான்றுகளெல்லாம் கிடையாதா என்று சிலர், சரி பலர், கேட்பீர்கள்.
இந்த புதினத்தின் சரித்திர சான்றுகளுக்கு "சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தாரின் பிற்காலச்சொழர்கள், அருளுடைச்சோழ மண்டலம் – N . சேதுராமன்" படிக்கலாம்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பற்றிய குறிப்பை புதினத்தின் கடைசியில் தான் எழுதப்போகிறேன்.
வெயிலுமில்லாத மழையுமில்லாத ஒரு காலைப்பொழுது,
ஜெயராமன் ரகுநாதன்
தொடர்புக்கு: jraghu1956@gmail.com
ஜெ. (ஜெயராமன்) ரகுநாதன் சென்னை லயோலா கல்லூரியில் பிகாமும் அகில இந்தியக்கணக்காளர்கள் தேர்வும் முடித்த சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டிவிஎஸ் கம்பெனிகளில் மேலாளர், பொது மேலாளர் மற்றும் துணைத்தலைவராக 25 வருடங்கள் பணியாற்றியபின்னர். ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தைத்தொடங்கி வெற்றிகரமாக 5 வருடங்கள் இயக்கினார். பின்னர் அதன வளர்ச்சியின் காரணமாக நிறுவனத்தை இன்னொரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்துடன் இணைத்தார்.
இப்போது லாப நோக்கமில்லாத கம்பெனி ஒன்றைத்தொடங்கி, அதன் மூலம் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் பயிற்சிகள் நடத்திவருகிறார்.
மார்கெட்டிங், விற்பனை, விஸ்தரிப்பு, மேலாண்மை, ERP என்னும் கம்பெனி-தழுவிய மென்பொருள் ஆலோசனை ஆகியவற்றில் விற்பன்னராக விளங்கும் ரகுநாதன் இரண்டு மென்பொருள் கம்பெனிகளில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். Microsoft மற்றும் IBM கம்பெனிகளின் பார்ட்னராக இருக்கும் இந்தக் கம்ப்பெனிகளின் மூலமாகவும் வாடியாளர்களுக்கு ஆலோசனை தந்து வருகிறார்.
எம் ஓ பி வைஷ்ணவா, எதிராஜ், ஷிவ் நாடார், காஞ்சி பல்கலைக்கழகம், இந்தோ ஜெர்மானிய வர்த்தகதொழிற்பயிற்ச்சி மையம், ஆசான் கல்லூரிக்குழுமம் போன்ற இடங்களில் அழைக்கப்படும் பேச்சாளராகச்சென்று மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையையும் தரும் விதத்தில் சொற்பாழிவு ஆற்றி வருகிறார். பல கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினராக இருந்து பாடத்திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றுவதற்கும் ஆலோசனைகள் சொல்லி வருகிறார்.
உலகத்தின் பல நாடுகளுக்குச்சென்று வந்திருக்கும் இவர் சில ஆண்டுகள் ரோடரி க்ளப்பின் இயக்குனராகவும் சேவை புரிந்திருக்கின்றார்.
சிறு வயதிலிருந்தே தமிழ் படிப்பிலும் எழுத்திலும் ஆர்வமானவர். பத்தாவது வயதிலேயே எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் பெற்று பின்னாளில் அவரின் நண்பராகவும் ஆனார். சுஜாதா, தி ஜானகிராமன், பாலகுமாரன், போன்றோரின் எழுத்தாலும், அறிமுகத்தாலும் படிப்பாலும் தன் சிந்தனையும் எழுத்தும் சீரடைந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.
இவர் எழுதிய கதைகள் கல்கி, வலம், மங்கையர் மலர், தென்றல். சிறகு, பால ஹனுமான் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. டாக்டர் வைகுண்டம் என்னும் கதாபாத்திரத்தை வைத்து இவர் எழுதிய பாசிடிவ் சிறுகதைகள் மிகுந்த வரவேற்பைப்பெற்று, இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டில் புத்தகமாகவும் வந்திருக்கிறது. இவர் எழுதிய ஒரு நாவல், இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் அச்சில் ஏற இருக்கின்றது. Facebook மற்றும் சில மின்னிதழ்களில் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கதை, கட்டுரைகள் எழுதி ஏராளமான வாசகர்களைக் கவர்ந்திருக்கிறார்.
அபரங்கதிலகா, திருவரங்கண், குறிஞ்சி என மூன்று நாடகங்களம் எழுதி அவை தியேட்டர் மெரீனாவால் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப்பெற்றதோடு பரிசுகளும் வென்றிருக்கின்றன.
2010ஆம் ஆண்டின் “வளரும் தொழில்முனைவோரின் தலைவரா”கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவியும் ஒரு சார்ட்டர்ட்டு அக்கவுண்டண்ட். இரண்டு மகன்கள். பெரிய மகன் திருமணமாகி ஜெர்மனியில் வசிக்கிறார். இளையவர் அமெரிக்காவில் இருக்கிறார்..
Rent Now Srinivasan Ramamurthy
சரித்திர கதையில் விஞ்ஞான புனைவு ஒரு புதிய யுக்திதான் சுஜாதா கதையின் சுவாரஸ்யமும கதையோடு இணைந்து இருந்தது
Ram Sridhar
ஒரு பெரிய சபாஷ். பெரிய கோயில் கோபுரத்தில் இருக்கும் தொப்பி போட்ட உருவத்தை வைத்து அருமையான விஞ்ஞானப் புனைவு. சுஜாதா நம்மிடையே இன்று இருந்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருப்பார். நன்றாக முடிச்சுக்களை அவிழ்த்துள்ளீர்கள். சுவாரஸ்யமாக படிக்க வைத்ததற்கு என் வாழ்த்துக்கள் .