R. Manimala
காதலே பிடிக்காத அம்மாவுக்கு அதிர்ச்சி தரும் நிர்மல்,தர்ஷிணியால் வரும் குழப்பங்கள். பின் தர்ஷிணி பிரிய வழி தவறிய நிர்மல் நோயால் பாதிக்கப்பட, அவனின் அம்மாவும் ஒதுக்கிறாள்.தற்செயலாக சித்தரின் உதவியால் மறுவாழ்வு பெற்ற நிர்மல் தர்ஷிணியை சந்திப்பார? வாசிக்கலாம்... அலைகள் அமைதி தேட
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.