Puvana Chandrashekaran
வினோதமான கனவுகளால் துரத்தப்பட்டு, அந்தக் கனவுகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்ளத் துடிக்கிறான் ரூபேஷ். உண்மை பெரிய அதிர்ச்சியாக அவனைத் தாக்குகிறது. அவனுடைய சிறு வயதுத் தோழியான ரூபிணிக்கு நடந்த கொடுமைகள் தெரிய வருகின்றன. அகால மரணம் அடையும் ரூபிணியின் ஆவி, தனக்கு நடந்த அநீதிக்குத் தகுந்த தண்டனை வழங்கத் துடிக்கிறது. அந்த ஆத்மாவின் ஆசைகள் நிறைவேறினவா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு வடநாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றிய உண்மைச் செய்திகளின் அடிப்படையில் எனது கற்பனையைக் கலந்து தந்திருக்கிறேன். பெண்களுக்கு உண்மையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல முயற்சி செய்ததால் என்னால் வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை.படித்துப் பாருங்கள்.