அணையா விளக்கு மேவார் ராணா கும்பாவின் பல முகங்களாய் வெளிப்படும் குணாதிசயங்களை மட்டுமின்றிப் பெண்களின் நளினம், அஞ்சா நெஞ்சம், நியாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவான சிந்தனை ஆகியவற்றையும் சொல்லுகிறது.
ராணாகும்பா பெண்களிடம் காட்டிய மரியாதையும் சிறப்பாக வெளிப்படுகிறது. கும்பராணாவை இத்தனை உயர்வாக எந்தக் கதாசிரியரும் சித்தரித்து நான் படித்ததில்லை. அதற்காகவே கதாசிரியை நம் மதிப்புக்கு உரியவராகிறார்.
இந்தப் படைப்புகளின் மூலம் சரித்திரகாலச் சிறப்புகளையும் நற்பண்புகளுக்கு அளிக்கப்பட்ட மதிப்புகளையும் அழுத்தமாக வாசகர்கள் மனதில் சுவாரஸ்யம் குன்றாமல் பதியவைக்கிற ஆசிரியைப் பாராட்டுக்குரியவர்.
இந்தக் குறுநாவல்களைப் படித்த பிறகு நான் மேவாரில் பிறந்தவள் என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்ளுகிறேன்.
-லஷ்மிரமணன்
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Rent Now