Home / eBooks / Anbai Thedi...
Anbai Thedi... eBook Online

Anbai Thedi... (அன்பைத் தேடி...)

About Anbai Thedi... :

தனது இரண்டு மகன்களும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் மொத்த சொத்தையும் அவர்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு மூத்தவனுடன் வாழ்கிறார் வெள்ளிங்கிரி. மாமனார், மற்றும் மாமியார் பேச்சைக் கேட்டு மனம் கெட்டு, தந்தையைத் துரத்தி விடுகிறான் மூத்தவன்.

இளைய மகனிடம் வெள்ளிங்கிரி தஞ்சம் புக, அவனும் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தையை துரத்தி விடுகிறன். அனாதையாய்த் தெருத் தெருவாய் அலைந்து விட்டு, அந்த ஊரை விட்டே போய் விடும் எண்ணத்தில் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்த பெஞ்சில் அமர்கிறார். அங்கே, ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு வயதான பெண்மணியைக் காப்பாற்றுகிறார். அவளும் தன்னைப் போலவே மகனால் துரத்தி விடப்பட்டவள் என்பதையறிந்து அவள் மீது இரக்கம் கொள்கிறாள்.

இருவரும் “இவர்களுக்கு பயந்து நாம் ஏன் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும்?..இங்கேயே ஒருவருக்கொருவர் ஆதரவாய் என்று முடிவெடுத்து, விகல்பமில்லாத அன்போடு, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டு வாழ்கின்றனர்.

விஷயம் கேள்விப்பட்டு பெருத்த அவமானத்திற்குள்ளான வெள்ளிங்கிரியின் மகன்கள் கோபாவேஷமாய் வந்து, அவர் இல்லாத போது அந்தப் பெண்மணியைத் தாக்கி விட்டு, குடிசையையும் சிதைத்து விட்டுச் செல்கின்றனர்.

குடிசைக்குத் திரும்பி வந்த வெள்ளிங்கிரி அந்தப் பெண்மணியைக் கண்டாரா?...

மனதை நெகிழச் செய்யும் அந்த முடிவு இந்த நாவலின் சிறப்பு. வாசியுங்கள்.

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books