தவறான நபரைக் காதலித்து அவப்பெயரைச் சந்திக்கும் பெண் தன் தந்தையின் வெறுப்பைச் சம்பாதிக்கிறாள். படிப்பு தடைப்பட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. அந்த நேரத்தில் கடவுள் அனுப்பிய மனிதர் மாதிரி ஒருவர் இவர்கள் இல்லம் தேடி வருகிறார்.
அவர் பெண்ணின் வாழ்வின் உள்ள சிக்கல் முடிச்சு அவிழ ஒரு வழி சொல்கிறார். அது அந்தப் பெண்ணின் வாழ்க்கை பக்கங்களை மாற்றி அமைக்கிறது. புதிய ஔி அவள் வாழ்வில் பரவி, எப்படி அவளின் துன்ப வாழ்வு இன்ப வாழ்வாக மாற்றியது என்பதையொட்டி கதை அழகாய் நகர்ந்து பயணிக்கும். உங்கள் கருத்துகளை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் கூறும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
நான் கொளப்பலூர் (கோபிசெட்டிபாளையம்) என்னும் ஊரில் வசிக்கின்றேன். என் முதல் சிறுகதை 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. அதற்குப் பின் நாவல் ஒன்று எழுதி, 'இதய நிலா' என்னும் மாத இதழுக்கு அனுப்பினேன். அது தேர்வாகி அச்சில் வந்தது. தொடர்ந்து எழுதி வருகிறேன். தற்சமயம் ஒரு இணையம் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நாவல், சிறுகதை, ஒரு பக்கக் கதை, பாடல், கட்டுரை மற்றும் திரைக்கதை எழுதுவது என்று எழுத்து சார்ந்த அத்தனை விசயங்களும் மிகவும் பிடிக்கும். எப்போதும் எழுத்து என்னுடன் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
'அன்னையின் மகிழ்ச்சி குடும்பத்தின் மலர்ச்சி' என்னும் தலைப்பில் எழுதிய, இணையம் சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளேன். இலங்கையைச் சார்ந்த தமிழ் நண்பர்கள் இயக்க உள்ள ' டார் டூ பி ஏ லேடி' (Dare to be a lady ) என்னும் குறும்படத்திற்கு ஒரு பகுதி பாடல் எழுதியுள்ளேன். அது மகளிர் தின சமயத்தில் வெளியானது.
நிறையக் கற்க வேண்டும், குறைகளைக் களைய வேண்டும், ஆத்மார்த்தமான சில படைப்புகளையாவது எழுத வேண்டும் என்பதுவே எனது கனவு. அந்த வகையில் அதற்கு ஒரு அழகான தளத்தை ஏற்படுத்தியுள்ள புஸ்தாகவிற்கு என் அன்பு கலந்த நன்றிகள்.
உங்கள் கருத்துகளை என்னிடம் பகிரலாம். srigangaipriya@gmail.com
Rent Now