Home / eBooks / Andha 37 Varudangal
Andha 37 Varudangal eBook Online

Andha 37 Varudangal (அந்த 37 வருடங்கள்)

About Andha 37 Varudangal :

முன்னுரை

ஆலமரத்திற்கு அதில் வாழ் அணிலின் அணிந்துரை... இல்லை ஆராதனை இது.

நாமும் எழுத முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவர்களில் முக்கியமானவர் நம் அறிவில் கலந்துவிட்ட திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள். அவர் இறந்து முழு வருடம் கடந்ததை நினைவுட்டும் கூட்டத்தில் பேசிய அனைவரும் அவர் எழுத்தை விட அவரைப் பற்றி அதிகம் பேசிய போது என் இழப்பு எத்தகையது என்று புரிந்தது.

ஒரு ஏகலைவனாகவே இருந்துவிட்டிருந்தேன். இல்லையெனில் நம் உணர்வில் கலந்துவிட்ட திரு பா. ரா. என்றே பதிவு செய்திருப்பேன். அதற்கு அவர் இளைய மகனும் ஒரு காரணம். ஆம் அவர் என்னை மிக தாமதமாக புரிந்து கொண்டதும் ஒரு காரணம். நகைச்சுவை, பேச்சில் வருவது வேறு, எழுத்தில் வருவது வேறு. திரு பா. ரா. இரண்டிலுமே ஜாம்பவான்.

இவர் அனுபவித்த வறுமையையும் நகைச்சுயையுடனே விவரிக்கிறார் 'அந்த 37 வருடங்களில்' என்கின்ற அவர் படைப்பு வந்த காலத்தே இவருடைய நகைச்சுவை உணர்ச்சிகளை படித்தோரும் அவருடன் கூட வாழ்ந்தோரும் புரிந்து கொண்டனரா என்பது ஒரு கேள்வியாக மனதில் எழுவது தவிர்க்க முடியாதது.

இதன் காலத்தை - அவ்வப்பொழுது பெஞ்சு அல்லது காலரி டிக்கெட்டில் இரண்டணா (பன்னிரென்டு பைசா) கொடுத்து கௌரவமாக சினிமா பார்க்க வசதிபட்டது - என்ற வரிகளில் அனுமானித்துக் கொள்ளலாம். அக்காலத்தே இப்படி எழுதியவரை என்ன சொல்லித்தான் பாராட்டுவது.

அந்த காலத்து நகைச்சுவை இன்றும் இளமையாக இருப்பது அதன் ஊற்றின் - காலத்தை மறுதலித்த - சிரஞ்சீவித்தனத்தை காட்டுகிறது. 'விரலிடுக்கில் சிகரெட் வாழாவெட்டியாய் மடியும்' என்ற வரி ஒரு ஹைகூ. அப்படியே கண்முன்னே ஒரு சாம்பல் தொடர் உருளை விரலிடுக்கில் இருப்பது படிப்பவர் மனக்கண்ணில் வந்து நின்று விடுகிறது. மேலும் வாழாவெட்டியாய் என்ற விவரம் பல விடயங்களை நமக்கு பகிர்ந்து விடுகிறது. இவையாவும் நகைச்சுவை அழகால் நுணுக்கமாக வேயப்பட்டிருக்கிறது. அவர் கொஞ்சம் தீவிர விடயங்களையும் முயன்றிருக்கலாமோ என்ற தாபம் நம்மை வந்தடைகிறது.

இப்படைப்பில் இடம் பெரும் சம்பவங்களும் சம்பாஷணைகளும் விவரணைகளும் பல படங்களில் (எழுத்திய காலத்திற்கு பிற்பட்ட) எடுத்தாளப்பட்டிருப்பதை எழுத்தையும் திரையையும் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

இவருக்குள் நாம் தனித்தனியாக பார்த்த கலைவாணர், நாகேஷ், தங்கவேலு, எம் ஆர். ராதா இவர்களனைவரும் ஒன்றாக கலந்து எழுத்துக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதில்லாமல் அவரும் இவர்களோடு சேர்ந்து ஒரு அமர்களமான நகைச்சுவை ஜூகல்பந்தியாக பல இடங்கள். அப்போதே இவருள்ளே திரு. பாக்கியராஜும் இருந்திருக்கிறார். சான்று இவ்வரிகள். "ஒரு சம்சாரியான ஐயர் இருந்தார். மகா உத்தமர். ஆசாரசீலர். மிக ஆசாரமாக இருந்தாலே அவர்களுக்கு நிறையக் குழந்தைகள் இருக்கும் என்கிற பழங்கால மரபுப்படி அவர் பெரிய குடும்பஸ்தர்.

அவர் தங்கியிருந்த வீட்டில் படிக்க வந்த பையன்கள் அசார்டட் பிஸ்கட்கள் போல சிதறியிருந்தார்கள் என்ற விவரணை எவ்வளவு நுணுக்கம், என்ன ஒரு ரசனை. மேலும் படிப்போரை கவரும் நகைச்சுவை. இவரை இவர் வாழ்ந்த காலம் முழுவதுவாக கொண்டாவில்லை என்பது என் எண்ணம். இப்படைப்பு அவரின் சுயசரிதைக்கான ஒரு முன்னோட்டமாக இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அவரின் இயற்கையான நகைச்சுவை உணர்வுள்ள எழுத்துக்கான show room display வாகவே தெரிகிறது.

இவர் படைப்புகள் எல்லாமே டிஜிடலைஸ் பண்ண வேண்டும் என்பது என் கோரிக்கை.

ஒரு பெரிய படைப்பாளின் படைப்புக்கு யாருமறிய ஒரு ரசிகனை விட்டு அணிந்துரை எழுத வைக்க யோகேஷ் தவிர யாரால் முடியும். நன்றி யோ. பணி சிறக்க, தொடர, படர வாழ்த்துக்கள்.

- கோவிந்த் மனோஹர்

Address :
FLat No. 1-A, Pushkar Exotica
34. 9th Street, U Block
Anna Nagar, Chennai - 40.
Mob : 94444 00712

About Bakkiyam Ramasamy :

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.

Rent Now
Write A Review

Same Author Books