Home / eBooks / Anukundu
Anukundu eBook Online

Anukundu (அணுகுண்டு)

About Anukundu :

சரித்திர நாவல் எழுத போகிறேன் என்று நான் சொன்னப்போது பலர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். கல்கி, சாண்டில்யன், விக்கிரமன் போன்ற எழுத்தாளர்கள் தொட்ட சிகரம் எப்படி இருக்கிறது என்ற பார்க்கும் ஆசையில் நானும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதை சொன்னேன். 'கலைமாமணி' விக்கிரமன் உட்பட பலர் சரித்திர நாவல்களுக்கு அதிகம் படிக்க வேண்டும். சொல்லப்படும் விபரங்கள், சம்பவங்கள், காரணங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்று பல அறிவுரைகள் கூறினர். குறிப்பாக கமலபிரியா அவர்கள் சரித்திர நாவலில் ஒவ்வொரு கட்டத்தை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டினார்.

சரித்திர நாவல் எழுதலாம் என்று நினைத்த போது எதை பற்றி எழுதலாம் ஒரு சின்ன குழப்பம் இருந்தது. எழுத்தாளர் பிதாமகன்கள் சேர, சோழ, பாண்டியர்களை ஒன்று விடாமல் எழுதிவிட்டார்கள். நானும் அதை பற்றி எழுத விரும்பவில்லை. ஆனால், 'சரித்திர நாவல்' எழுத வேண்டும் என்ற முடிவில் மிக தீவிரமாக இருந்தேன்.

ஒரு முறை நண்பருடன் 'சி.டி.' வாங்க சென்ற போது 'ஹிரோஷிமா' என்ற ஆவணப்படத்தின் சி.டியை பார்த்தேன். 'ஹிரோஷிமா' படத்தை பத்து தடவை மேல் பார்த்து விட்டேன். 'அணுகுண்டு தாக்குதல் மையமாக வைத்து எழுத வேண்டும் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டேன்.

ஹிரோஷிமா படத்தின் திரைக்கதை வடிவமாக வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஆனால், ஹிரோஷிமா ஆவணப்படத்தின் நாவல் வடிவம் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துவிட்டது என்ற உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

வரலாற்று நாவல் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக சுமோ ஹங் என்ற சீன பாத்திரமும், லிங்கம் (அமெரிக்க பத்திரைக்கையாளர்) பாத்திரமும் கற்பனைக்காக சேர்த்துக் கொண்டேன். 2006ல் ஆப்பிரிக்க குழந்தை எழுதிய கவிதை “you call me coloured” அமெரிக்க ட்ருமென் படிப்பது போல் அமைத்தேன். அன்றைய தேதி கறுப்பின பிரச்சனையை (உள்நாட்டு) தவிர்த்து அமெரிக்க உலகப் போரில் மட்டுமே கவனம் செலுத்தியது என்பதை உணர்த்துவதற்காக பயன்படுத்தினேன்.

நான் இத்தனை நாட்கள் செலவிட்டது சரியானதா என்று கேள்விக்கு வாசகர்களாகிய நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்புடன்
குகன்

About Guhan :

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rent Now
Write A Review