Home / eBooks / Apoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural
Apoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural eBook Online

Apoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural (அபூர்வ ராமாயணம் : தொகுதி 1 - காற்றின் குரல் )

About Apoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural :

வற்றாத ஜீவநதியாய் இந்திய மனங்களில் என்றென்றும் ஓடிக் கொண்டிருப்பது ராமாயணம் என்ற இதிகாசம்.

என் ராமாயணக் கதைகள், ராமாயணத்தை விமர்சனபூர்வமாக அணுகும் தன்மையைக் கொண்டவை அல்ல. ராமாயணத்தில் சொல்லப்படும் என்றும் நிலைபேறுடைய அறநெறிகளை மீண்டும் மக்கள் மனத்தில் எழுச்சியுறச் செய்யவேண்டும் என்பதே எனது கதைகளின் நோக்கம்.

இந்தக் கதைகள் நடந்த சூழலுக்கும் கற்பனைக்கும் நான் பொறுப்பேற்றாலும் இந்தக் கதைகளுக்கான கருக்கள் முன்னரே நம் தேசத்தில் புழங்கி வருபவைதான். நாடோடிப் பாடல்களிலும் பல இசைக் கலைஞர்களின் கீர்த்தனைகளிலும் பல்வேறு ராமாயணங்களிலும் இந்தக் கதைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன.

தொண்ணூற்றியாறு வயது நிறைவாழ்வு வாழ்ந்த என் தந்தை திரு பி.எஸ். சுப்பிரமணியம் அவர்களும் தொண்ணூறு வயது நிறைவாழ்வு வாழ்ந்த என் தாய் திருமதி கே. ஜானகி அவர்களும் வாழ்நாளெல்லாம் ராமாயண இதிகாசத்தில் தோய்ந்து வாழ்ந்தவர்கள். வீட்டில் என் பெற்றோரிடையே நிகழும் சர்ச்சைகளே பெரிதும் ராமாயணம் குறித்ததாகத் தான் இருக்கும்.

இந்நூலை வாசிக்கும் வாசககர்கள் அனைவருக்கும் ஸ்ரீராமரது திருவருள் பரிபூரணமாகக் கிட்டவேண்டும் என்றும், அறநெறிகளைப் பின்பற்றுவதில் நாட்டம் அதிகமாக வேண்டும் என்றும் ஸ்ரீராமரையே மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

About Dr. Thiruppur Krishnan :

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினமணியில் கால் நூற்றாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை முதல் பரிசு, ஆனந்த விகடன் வழங்கிய சிறுகதைக்கான முத்திரைப் பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர்.

ஹரிவம்சராய் பச்சன் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது, சுகி சுப்பிரமணியம் நூற்றாண்டு விருது, டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் விருது, சென்னை கம்பன் கழகம் மூலம் நிறுவப்பட்டுள்ள எழுத்தாளர் சிவசங்கரி படைப்பிலக்கிய விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய 'சான்றோர்' விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞான வாரிதி, தமிழ்ச் செல்வம், தெய்வத் தமிழ் மாமணி, தமிழ் நிதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர்.

இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் வழங்குபவர்.

திரு ஏ.வி.எஸ். ராஜா அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்படும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர்.

Rent Now
Write A Review

Same Author Books