Appachi

Ranimaindhan

0

0
eBook
Downloads2 Downloads
TamilTamil
NovelNovel
BiographyBiography
Page350 pages

About Appachi

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு வந்தால் ஒரு இனிய அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை.

“பிரதர், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். வந்து போக முடியுமா?” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பிற்பகலில் திரு. ஏவி.எம். சரவணன் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் கேட்டபோது எனக்கும் அத்தகைய இனிய அதிர்ச்சியே ஏற்பட்டது.

போனேன்.

“‘அப்பச்சி’யின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட விரும்புகிறேன். அதை எழுதும் பணியினை உங்களிடம் தர முடிவு செய்திருக்கிறேன். செய்து தர முடியுமா?” என்றார்.

அதிர்ச்சி நீங்கி வியப்பு மேலிட்டது.

என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னை நெகிழ வைத்தது. என் முதல் நன்றி அவருக்கு.

கடந்த ஆறு மாதங்களாக, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எனக்கு ஏவி.எம் என்ற மாமனிதரின் வாழ்க்கைக் குறிப்புகள்பற்றிய சிந்தனைதான்.

திரு. ஏவி.எம் அவர்களோடு பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நூறுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சேகரித்ததே ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. எந்தெந்த அத்தியாயத்தில் அவை பொருந்தி வருமோ அங்கங்கே அவற்றை சேர்த்திருக்கிறேன்.

அவையே உங்கள் கரங்களில்...

About Ranimaindhan:

கு. ராதாகிருஷ்ணன், 15.10.1944 ல் பிறந்தார். பி.காம்., சி.ஏ.ஐ.ஐ.பி., படித்துள்ளார். ராணிமைந்தன் எனும் புனை பெயரில் பல கதைகள் எழுதியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையில் அக்டோபர் 1965 முதல் மார்ச் 1997 வரை - 32 ஆண்டுகள் பனியாற்றினார். பின் லண்டன் பி.பி.சியின் தமிழ் வானொலிப் பிரிவான 'தமிழோசை சேவையில் சென்னை அலுவலகத்தில் நேயர் நல்லுறவு அதிகாரியாக ஏப்ரல் 1997 முதல் அக்டோபர் 2004 வரை - 7 ஆண்டுகள் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகி வரும் 'தமிழ் முழக்கம் பண்பலை வானொலிக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலிருந்து வாரம் தோறும் செய்தி வாசித்துள்ளார்.

அமெரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்ரீலங்கா, ஆகிய வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

திரு. சாவி அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'தினமணி கதிர்', 'குங்குமம்', 'சாவி' இதழ்களில் 1975 முதல் 2000 வரை மூவாயிரத்திற்கு மேற்பட்ட பேட்டிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் - தினமணி கதிரில் வாரந்தோறும் அக்கரைச் சீமை என்ற தலைப்பில் உலக நடப்புகள் பற்றிய தகவல் தொகுப்பை 180 வாரங்களுக்கு எழுதியுள்ளார்.

சாவி அவர்களின் மறைவிற்குப் பிறகு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஈடுபாடு பல்துறை பெருமக்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருது (2002), சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'தமிழ் வாகைச் செம்மல் விருது (2003), ஃபிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'நூல் வேந்தர் விருது (2006), அகில இந்திய சமூக நல அமைப்பு, புதுச்சேரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2009), அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களின் 85ஆம் பிறந்த நாள் மங்கல விழாவில் சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய சான்றோர் விருது (2010), தமிழக அரசின் 'கலைமாமணி' விருது (2011), சென்னை தேவன் அறக்கட்டளை வழங்கிய தேவன் நினைவுப் பதக்கம் (2011), சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்குரிய சேக்கிழார் விருது (2016), 'ராம்கோ ராஜா' - நன்னெறி வாழ்க்கை நூல் 2017ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இலக்கிய சிந்தனை அமைப்பு வழங்கிய பாராட்டு (2018), சென்னை கம்பன் கழகம் வழங்கிய திருமதி சி.எம்.பிரேமகுமாரி ,நினைவுப்பரிசு (2018) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

More books by Ranimaindhan

View All
R.M.V. - Oru Thondar
Ranimaindhan
Nirvaga Aalumai N. Ramdas
Ranimaindhan
Oodaga Theni Sridhar
Ranimaindhan
Rasaram - 60
Ranimaindhan
Kalaimamani V.C. Guhanathan
Ranimaindhan

Books Similar to Appachi

View All
Kaadhalin Menporul Savithiri Ganesh
M.G.S. Inba
Pudhuyuga Puratchi - Narayanamurthy-in Vazhkkai Varalaru
Umapathi K
W.P.A Soundrapandian
Kulashekar T
Naan Ramanusan
Amaruvi Devanathan
Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar
M. Kamalavelan