சிறுகதையை எப்படிச் சொல்லவேண்டும் என்ற கேள்விக்கு ‘கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்' என்று சுஜாதா ‘சிறுகதை எப்படி எழுதுவது' என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார்.
ஒருமுறை, என்னுடன் ஸ்கூலில் படித்த நண்பன் ஒருவன், திருச்சி ரயிலில் டீ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததால் எழுதிய கதை ‘வின்னி'.
‘பிச்சை' என்ற கதை விகடனுக்குத் தேர்வானபோது பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒருவர் ‘Selected' என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். ‘*' பட்டனை செல்போனில் யதேச்சையாக அழுத்த, அது ‘Rejected' என்று மாறியது. அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதைதான் ‘ஆவி' கதை.
சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பத்தில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள். சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படிக் கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும்.
பல மாதங்களாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, சட் என்று கதை தோன்றும் அந்தக் கணம் சந்தோஷமாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதைகள் பல அந்த மாதிரி எழுதியவைதான்.
இதிலுள்ள சிறுகதைகள் விகடன், குமுதம், கல்கி, டைம்ஸ் இலக்கிய மலர், குங்குமம் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் வந்தவை. அவர்களுக்கு என் நன்றி.
- சுஜாதா தேசிகன்,
பெங்களூர்.
‘சுஜாதா தேசிகன்’ என்ற பெயரில் பத்திரிக்கையிலும், சமூக ஊடகத்திலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். "தேசிகன் என் கதைகளில் ஒரு 'அத்தாரிட்டி'. பல சமயங்களில் நான் எழுதிய கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருஷத்தில் என்ன பத்திரிகையில் எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது அதிர்ஷ்டமே!" என்று எழுத்தாளர் சுஜாதவிடம் பாராட்டுப் பெற்றவர்.
வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். நெருங்காதே நீரிழிவே என்று இவர் கல்கியில் எழுதிய தொடர் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது.
Rent Now பிச்சைக்காரன்
http://www.pichaikaaran.com/2020/04/blog-post_26.html?m=1
பிச்சைக்காரன்
http://www.pichaikaaran.com/2020/04/blog-post_26.html?m=1