இதென்ன சரித்திரக்கதையா?
இல்லைங்க… இல்ல இல்ல... ஐயோ ஆமாங்க... ஆமாம்... சரித்திர நாவல்தான். ராஜா ராணி பல்லக்கெல்லாம் இடம்பெறுகின்றனரே... சமூகக் கதையா?
கட்டாயமா யெஸ்ஸூங்க. கதாநாயகி ஸ்டைலாய் ஆடி காரில் போனா அதை என்னன்னு சொல்லுவீங்களாம்
கிரைம் கதையா?
அதுவும் உண்டுங்க. அடி.... தடி.... பிளட்.... பேண்டேஜ்… கிளாஸ்களின் சிதறல்!
நகைச்சுவைக் கதையா?
நகைச்சுவைன்னு நினைச்சு நான் எழுதியதற்கெல்லாம் நீங்க நகைச்சு வைக்கணும்னு நான் என்ன கண்டிஷனா போட முடியும்? ஆனாலும் சிரிச்சுட்டீங்கன்னா… ஆமாங்க. நகைச்சுவைக் கதைதான்
ஆராய்ச்சிக் கதையா?
கண்டிப்பா யெஸ்ஸுங்க. இதில் கதை எங்கே இருக்கு என்று பூதக்கண்ணாடி வைச்சு ஆராய்ச்சி பண்றதால சொல்லலீங்க… சயன்டிஸ்டெல்லாம் வராருங்களே அதனால சொன்னேனுங்க.
ஆன்மிகக் கதையா?
பின்ன? அந்த ஆர்வம் உள்ளவங்களை ஏமாத்தலாமாங்க? அதனால கோயில்… ஓலைச்சுவடி எல்லாமும் வருங்க
அய்யய்ய... இப்ப எந்த வகைக்கதைன்னு சொல்ல வர்றீங்க?
உங்களுக்கு எந்த ஜானர் பிடிக்கும்? அந்த வகைக் கதைங்க. வர்ட்டடடா.
நீங்க வாங்க கதைக்குள்ளாற. இதோ கதவைத் திறந்துட்டோம்ல
சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.
பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.
1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.
குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.
Rent Now