சிறுவயதில் இருந்தே தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதில் தனி ஆர்வம் இருந்தது. அவ்வாறு படித்த பல விஷயங்கள், சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறது. அந்த சுவாரஸ்யமான சம்பவங்களை குங்குமம் & முத்தாரம் இதழிலும் முகநூலிலும் எழுதினேன். அதை படித்த பல வாசகர்கள் கடிதம் மூலமும் முகநூலிலும் பாராட்டினர், இத்துடன் சென்னை வானொலியில் “டிஜிட்டல் இந்தியா” பற்றி பேசியதையும் தொகுத்து அறிஞர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உங்கள் கையில் புத்தகமாக.
சூர்யா சரவணன்
சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு எம்.ஏ. பத்திரிக்கை, எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் சென்னை வந்து பிரபல நாளிதழில் பணியாற்றுகிறார். சுமார் 12 நூல்களை எழுதியுள்ளார். ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். எழுத்து, பத்திரிக்கை துறையில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.
இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், பத்திரிக்கை ஆகியவை இவருக்கு பிடித்த துறைகள். சுயமுன்னேற்றம். ஊடகம் குறித்து கல்லூரிகளிலும் மேடையில் வகுப்பு எடுத்துள்ளார்.
Free - Read Now