Home / eBooks / Arulneri Muzhakkam
Arulneri Muzhakkam eBook Online

Arulneri Muzhakkam (அருள்நெறி முழக்கம்)

About Arulneri Muzhakkam :

மக்களின் அன்றாட வாழ்வைக் கவனித்து வரவேண்டி பொறுப்பு சமயத் தொண்டர்களுக்கு உண்டு. மக்களோடு மக்களாகப் பழகி அருள்நெறியைப் புகுத்தவேண்டிய சமய நிலையங்கள் தங்கள் கடமையை உணர்ந்து சரிவரத் தொண்டாற்ற வேண்டும்.

ஆண்டவனின் திருநாமங்களைப் பாடி மகிழ்வதற்காகவும் பேசி மகிழ்வதற்காகவும்தான் பஜனை மடங்கள் நாட்டில் எழுந்தன. அந்த உயரிய கருத்துக்களுக்கு இன்று நாட்டில் எதிர்ப்புக்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. அதனை இங்குக் குழுமியிருக்கின்ற அத்தனை மக்களும் நன்கு தெரிந்து கொண்டிருக்கலாம். அவர்களின் எதிர்ப்பு நம்மையும் நமது கடவுட்கொள்கையையும் எதுவும் செய்துவிட முடியாது. நாம் நமது காரியத்திலேயே கண்ணோட்டம் செலுத்தினால், தானாக விரைவில் நம்முடைய லட்சியங்கள் வெற்றிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமக்குப் புறம்பான காரியத்தின் நலத்திலோ தீதிலோ நமது கருத்தினைச் செலவிடாது இருத்தல் வேண்டும்.

மேலும் நெறிகளை அறிவோம் வாருங்கள் ....

About Kundrakudi Adigalar :

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.

பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தார். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள். அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972 இல் சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".

பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.

Rent Now
Write A Review

Same Author Books