Home / eBooks / Aval Oru Haikku
Aval Oru Haikku eBook Online

Aval Oru Haikku (“அவள் ஒரு ஹைக்கூ”)

About Aval Oru Haikku :

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான நர்மதா, இந்த ஆண்டு காதலர் தினத்திற்காக ஒரு புதிய நிகழ்ச்சியைத் திட்டமிடுகிறார். அதாவது கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தங்களால் எடுக்கப்பட்ட காதலர் தின நிகழ்ச்சியில் தாங்கள் பேட்டியெடுத்த அந்தக் காதலர்களைச் சந்திச்சு, அவர்கள் வாழ்க்கையில் இணைந்துள்ளார்களா?...அப்படி இணைந்திருந்தால் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா?...என்பது குறித்த நேர்காணலே அது.

அந்தக் குறிக்கோளாடு அவர் பயணித்த போது, பழைய காதலர்களின் இன்றைய வாழ்க்கையைக் கண்டு அதிச்சியடைகிறார்.

அதை மிகுந்த சுவாரஸியத்தோடு கதையாக்கியுள்ளார் கதாசிரியர். மேலும், நர்மதா என்னும் அந்த தொலைக்காட்சிப் பெண்ணை ஒரு ஹைக்கூ விரும்பியாக உருவாக்கி, கதையில் ஆங்காங்கே சில ஹைக்கூ கவிதைகளையும் புகுத்தி, கதையை மிக்க அழகாக நகர்த்தியுள்ளார்.

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books