Yamuna
இரு நாகங்களுக்கு இடையிலான முன்ஜென்மத் தீராக் காதலும் பகையும் மறுஜென்மத்தில் தொடர, ஆண்நாகம் நரேன் என்ற பெண்டகத் திருநங்கையாகவும் பெண்நாக தேவதை நிலானி என்ற நாகப்பெண்ணாகவும் மனித உருவெடுத்து மூன்று ஜென்மங்களாய் பிறந்து ஒருவரோடு ஒருவர் போரிட்டு அதேபொழுதில் காதல் வெக்கை மேவ கூடல் கொண்டு ஒரு சிசுவையும் ஈன்று மூன்றாம் ஜென்ம முடிவுப் போரில் சேர்வார்களா? அந்த சிசு யார்? சிவனோடு தொடர்புடைய அந்த ஆண்நாகம் யார்? என்ற பிரம்ம ரகசியம் உடைக்கப்படுவதே இக்கதையின் சாராம்சம். சற்று வித்தியாசமான விசித்திரமான காதல் கதை இது. பிரம்மிப்புடன் வாசிக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் பாராட்டத் தகுதியுடைய கதை.
அன்புடன்.
யமுனா.
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.