Home / eBooks / Aval Peyar Ishwarya
Aval Peyar Ishwarya eBook Online

Aval Peyar Ishwarya (அவள் பெயர் ஐஸ்வர்யா)

About Aval Peyar Ishwarya :

மனைவிக்கிக்காக கணவன் எழுதும் கவிதை தாஜ்மாஹால்- அவள் பெயர் ஐஸ்வர்யா.

பார்த்த நாள் தொடங்கி பழகிய, நூறு நாட்களில் தோன்றிய வாழ்க்கை வரிகளின் கவிதை தொகுப்பு அவள் பெயர் ஐஸ்வர்யா -01

இப்படித்தான் எழுதவேண்டும் என்று இலக்கணம் ஏதும் இல்லாமல், இயல்பாய் தோன்றிய கற்பனை வரிகள்தான் இவை.

ஒரு சிலருக்கு காதலிக்கப் பிடிக்கும் ஒரு சிலருக்கு மனைவியை மட்டும் பிடிக்கும் ஒரு சிலருக்கு மட்டும்தான் தன் மனைவியை காதலிக்கப் பிடிக்கும், அந்த வகையில் இது ஒரு மிக நீண்ட காதல் க்விதை தொடர்.

இந்த நெடுந்தூர கற்பனை பிரபஞ்சத்தில் தோன்றிய சில நச்சத்திர துளிகள் தான் - அவள் பெயர் ஐஸ்வர்யா.

சேர்ந்தே பயணிப்போமா?...நன்றி

About Paramaguru Kandasamy :

பரமகுரு கந்தசாமி தற்பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணராக ( IT INFRASTRUCTURE MANAGEMENT SERVICE ANALYSTS) பணியாற்றி வருகிறார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தமிழ் கவிதைகள், கதைகள், தன்னம்பிக்கை தொடர், எழுதும் ஆர்வம் கொண்டவர். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் " மழையிடை மின்னல்கள்" எனும் கவிதை நூலை எழுதியுள்ளார்.

அமேசான் கின்டில்- லில் " இரண்டு நிமிட கதைகள்" எனும் தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் மேஜிக், GOOGLE BLOGS, மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கல்லூரி மற்றும் அரசாங்க பள்ளிகளில் இலவசமாக செய்து வருகிறார்(THE MIRROR - HTTPS://THEMIRRORGROUPS.BLOGSPOT.COM). பள்ளிக் காலம் தொடங்கி கல்லூரி வரை 40க்கும் மேற்பட்ட மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அப்போதைய கடலூர் மாவட்ட COLLECTOR திரு.ககன்தீப்சிங்பேடி அவர்களிடம் பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டிகள் என பல பரிசுகள் பெற்றுள்ளார். விஜய் டிவி நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சியான நீயா நானாவில் பங்கேற்று இருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books