Home / eBooks / Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal
Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal eBook Online

Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal (அவசியம் தரிசிக்க வேண்டிய நவக்கிரக ஆலயங்கள்)

About Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal :

ஒவ்வொருவரது வாழ்வு ஏற்றம் பெறுவதிலும், இறக்கம் அடைவதிலும் நவக்கிரகங்களின் பங்கு கட்டாயம் உண்டு. போதாத வேளை என்றால், ‘கிரகங்கள் படுத்தற பாடு தாங்க முடியலே’ என்பர். வசதியான நிலைக்கு வந்த ஒருவரைப் பார்த்து, ‘ம்ம்ம்... எல்லா கிரகமும் அவன்கிட்ட கொண்டு போய்க் கொட்டொ கொட்டுன்னு கொட்டுது’ என்பர். கொட்டிக் கொடுப்பதாகட்டும்; வாரிச் சுருட்டிக் கொள்வதாகட்டும். கிரகங்கள் நமக்கு என்ன அருள்கின்றனவோ, அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். கல்வி, பொருளாதாரம், திருமணம், உத்தியோகம், வெளிநாடு வாய்ப்பு, தாம்பத்தியம், அரசியல், புகழ், - இப்படி எதற்கும் கிரகங்களின் ஆசியும் அனுகூலமும் தேவை. இன்றைக்கு நவக்கிரக வழிபாடு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. நவக்கிரகங்கள் ஆராதித்த கோயில்களாகத் தேடிச் சென்று வழிபடுகிறார்கள். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரத் தலங்களைத் தேடிச் சென்று ப்ரீதி செய்து வருகிறார்கள். எல்லாமும், நம்மைப் பிடித்த தொல்லைகள் விட்டுத் தொலைய வேண்டும் என்கிற ஒரே பிரார்த்தனைதான். ஜோதிடம் என்பது பொய்யல்ல. ஒருவரது ஜாதகத்தை வைத்துப் பார்க்கின்றபோதே, அவருக்கு என்னென்ன சாதகங்கள் இருக்கின்றன; பாதகங்கள் இருக்கின்றன என்பதை அட்சர சுத்தமாகச் சொல்லிவிடலாம். சாதகங்களை மேலும் கூட்டிக் கொள்ளவும், பாதகங்களைக் குறைத்துக் கொள்ளவும்தான் ஜாதகங்களைப் பார்த்து பரிகாரம் மேற்கொள்கிறோம். கோயில்களுக்குப் போய் வழிபாடு நடத்துகிறோம். கும்பகோணம் வரும் அனைத்து டூரிஸ்ட்டுகளும் நவக்கிரகத் திருத்தலங்களை தரிசிக்காமல் ஊர் திரும்புவதில்லை. நவக்கிரகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் அனைத்திலுமே தினம்தோறும் அபிஷேகம் என்ன... அலங்காரம் என்ன... கோலாகலம்தான்! ஒரு அபிஷேகம் முடிந்து அரை மணி நேரம்தான் ஆகி இருக்கும். அதற்குள் அடுத்த உபயதாரர் ஒருவர் அபிஷேகத்துக்கு வந்துவிடுவார். நவக்கிரகங்கள் அபிஷேகத்தில் திளைக்கின்றன. தூப-தீப மணத்தில் நித்தமும் ஜொலிக்கின்றன. நவக்கிரகங்களுக்கென்று எத்தனையோ ஆலயங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும், கும்பகோணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய நவக்கிரகத் திருத்தலங்களுக்குத் தனி மவுசுதான். காரணம் - அந்த அளவுக்குப் புராண முக்கியத்துவத்தையும் தோஷம் போக்கும் தன்மையும் கொண்டு விளங்குகின்றன. கும்பகோணம் இன்று பெருமளவு வளர்ந்ததற்கு இந்த நகரைச் சுற்றி அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்கள் காரணம் என்பதை அங்குள்ள வியாபார முக்கியஸ்தர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தங்கும் விடுதிகளும் உணவுக் கூடங்களும் இன்று கும்பகோணத்தில் ஏராளம். போக்குவரத்து வசதியும் தோதாக அமைந்துவிட்டது. சூரியனார்கோவில் (சூரியன்), திங்களூர் (சந்திரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), ஆலங்குடி (குரு), கஞ்சனூர் (சுக்கிரன்), திருநள்ளாறு (சனி), திருநாகேஸ்வரம் (ராகு), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய ஒன்பது திருத்தலங்களைப் பற்றி மிக விரிவாக ‘திரிசக்தி ஜோதிட’த்தில் வந்த கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பே இந்த நூல். தல புராணம், கிரகங்களின் சிறப்பு, வழிபட்ட தெய்வங்கள் - ரிஷிகள், உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம், செல்லும் வழி, தொடர்புகொள்ளும் தொலைபேசி எண் - இப்படி அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு வெளியான இந்த நூல், அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும், உற்ற நண்பனாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். நவக்கிரகங்கள் எல்லா நலன்களையும் உங்களுக்கு வாரி வழங்கப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Rent Now
Write A Review

Same Author Books