துளசியின் வாழ்க்கையில், முதலில் நுழையும் கதிர். அவளது சொத்துக்காக அவளை அடைந்து, அவளை ஏமாற்றிக் கொண்டிருக்க, அதை சிறிதும் அறியாத துளசியோ அவன்மேல் கண்மூடித்தனமான நேசம் வைக்க, அந்த நேசம் முழுதாக உடைகையில் அவளது நிலை என்னவாகும்?
அவளது சொத்தை அபகரித்தது மட்டுமல்லாமல், அவளை கயவர்கள் கையில் கதிர் ஒப்படைக்க, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள்? அவளை யார் மீட்டார்கள்? அவளது வாழ்வில் வசந்தம் வந்ததா? அதை அவளால் முழுமனதோடு ஏற்க முடிந்ததா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Free Dating Site. Meet New People Online: https://
Free Dating Site. Meet New People Online: https://f3gxp.page.link/Tbeh
?h=0663cf49240789db7d4c4704b00598a2& Chermadurai
Review is good