78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர்.
Rent Now கில்லர்ஜி தேவகோட்டை
ஐயாவின் எழுத்து வாழ்வியல் உண்மைகளை உணர்வுப்பூர்வமாய் கொண்டு வரும் அட்ஷய பாத்திரம். www.killergee.blogspot.com
Thenammai Lakshmanan
இவரின் கட்டுரைகள் போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. நாம் அன்றாட வாழ்வியலில் காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.http://honeylaksh.blogspot.com/2017/06/blog-post_67.html#more

இராய செல்லப்பா
புதுக்கவிதையில் இது ஓர் புதுரகம். எண்ணற்ற விஷயங்களை உட்பொருளாக்கிய கவிதைகள். இராமயணத்தை ஒரே வாக்கியக் கவிதையாக்கியுள்ளார். 'காதலுக்கு வயதில்லை', 'பாவைக்கு ஒரு பாமாலை' போன்ற காதல் கவிதைகள் சிறப்பானவை. 'கடவுள்-அறிவா, உணர்வா' என்ற கவிதை விவாதத்திற்குரியது. அரை நூற்றாண்டுக் கவிதைகள். இன்றும் புதியனவாக இருக்கின்றன.