கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Rent Now இராய செல்லப்பா
அழகான மரபுக்கவிதைகள். கவியரங்கக் கவிதைகளாக இருக்கலாம். படிக்க நாவல் போல சுவைக்கிறது. மிகச் சில இடங்களில் சந்தம் சற்றே சீரமைத்தால் உணர்ச்சி வேகம் பெருகும். இன்றைய கவிகன்ர்கள் பலருக்கு மரபுக்கவிதை எழுத வராததால் புதுக்கவிதை பக்கம் போயிருக்கிறார்கள். சுவாதிக்கு மரபு நன்கு கைவருகிறது. எனவே அவர் மரபை விடாமல் காக்கவேண்டும் என்னும் அவா எழுகிறது.