Home / eBooks / Bommalattam
Bommalattam eBook Online

Bommalattam (பொம்மலாட்டம்)

About Bommalattam :

“இன்னாருக்கு இன்னாரென்று எழுதி

வைத்தானே தேவன் அன்று...”

இரண்டு ஜோடிகள்... எதிர்பாரா விதமாக நிச்சயக்கப்பட்ட திருமணம்... ஜோடிகள் மாற வேண்டிய சூழ்னிலை...

மனப்பொருத்தமில்லா திருமணம்... ஆனால் பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று... விதியின் வசத்தால் இடம் மாறிய ஜோடிகள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்களா?... கயிற்றை தன் கையில் எடுத்துக் கொண்டவனோ இவர்களை ஆட்டுவிக்க... ஆட வேண்டியவர்களோ முரண்பட... வாழ்க்கை என்ற பொம்மலாட்டத்தில் வென்று சாதிக்கிறார்களா?... இல்லை தங்களை தொலைத்து ஆட்டத்தை இழக்கிறார்களா?... ‘ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்’... காதல் இருந்தால் எதுவுமே சாத்தியம் தான்...

அதே காதலால் தன் இணைக்காக மாறலாம் என்ற போக்கில் ஒத்த கருத்தில் இருவர் இருக்க... மற்றவர்களுக்காக ஏன் மாறவேண்டும் என்ற மனநிலையில் மற்ற இருவர்... யார் யாருடன் இணைந்தார்கள்?... இவர்கள் எண்ணங்கள் நிறைவேறியதா?... தங்கள் வாழ்க்கையை மீட்டார்களா?... படித்து மகிழுங்கள் வாசகர்களே... உங்கள் தொடர் ஆதரவை என்றும் நாடுகிறோம்...

ஸ்ரீலஷ்மி சகோதரிகள்

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review