இவரது ‘கேரக்டரோ கேரக்டர்’ புத்தகத்தை படிக்கும்போது சிரித்து சிரித்து, விலா வலிக்கும் ; நெகழ்ச்சியூட்டும் கட்டுரைகள் மனதைத் தொடும். இந்த கேரக்டர் கட்டுரைகள் ஒவ்வொன்றும் உயிரூட்டமானவை; பிரமாதமான வார்த்தைச் சித்திரங்கள்.
'கடுகு' என்னும் ’அகஸ்தியன்’...
சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து எழுதிவரும் இவர் நகைச்சுவை எழுத்தாளர்களில் முதல் வரிசையில் இருப்பவர்.
செங்கல்பட்டில் 1932 - ல் பிறந்த இவர்,குமுதம் கல்கி தினமணி கதிர், சாவி, குங்குமம் என்று எல்லா பத்திரிகைகளிலும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்.
அப்புசாமி நகைச்சுவை விருது, தேவன் விருது போன்ற சிறப்புகளைப்பெற்றவர். இப்போதும் அவர் 2009-ம் ஆண்டு துவங்கிய ’கடுகு தாளிப்பு’ என்னும் தன் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய கமலா தொச்சு கதைகள் மிகவும் பிரபலமானவை.
அமரர் கல்கியின் மீது அபார பக்தி கொண்ட இவர் தன்னை எழுத்தாளராக உருவாக்கியவர்கள் கல்கி, குமுதம் எஸ்.ஏ.பி., சாவி ஆகியவர்கள் என்று பணிவுடனும் நன்றியுடனும் தெரிவிக்கிறார். 'அகஸ்தியன்' என்ற பெயரிலும் இவர் கதை, கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
Rent Now