சார்லி சாப்ளின் சினிமா மௌன மொழியில் தன்னை துவக்கிய காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். அவர் கிட்டத்தட்ட 80 படங்கள் குறும்படங்களும், நெடும்படங்களுமாய் நடித்திருக்கிறார். அவரின் அத்தனை படைப்புலகமும் இங்கே சுவாரஸ்யமாக பதிவாகியிருக்கிறது. மேலும், அவரின் வாழ்க்கை வரலாறும் அடர்வாய் பதிவாகியிருக்கிறது. அவரின் முதல் காதல் தோன்றிய கதை, அந்த காதலி பிளேக் நோயில் இறந்துவிட, அவரின் தோற்றத்தில் உள்ளவர்களை எல்லாம் காதலித்து ஏமாந்து முடிவில் அதே தோற்றத்தில் அதே குணாம்சத்தோடு ஒரு காதலியை அவர் கண்டடைந்த காதல் கதை உட்பட, அவரை பற்றிய முழுமையான வாழ்க்கை மற்றும் படைப்பு அனுபவத்தை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த புத்தகம்.
திரைமொழியின் பரவசிப்புடன்,
தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now