இது மஜித் மஜிதி எழுதிய “நீலீவீறீபீக்ஷீமீஸீ ஷீயீ லீமீணீஸ்மீஸீ” என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக்கூடிய அதிசயம் நினைவுபடுத்தல் மூலமாக சாத்தியமாகி விடுகிறது.
அந்த ஏழ்மையில் உலழும் அற்புதமான அந்த இரண்டு குழந்தைகளின் வாழ்வில் இருபது ரூபாய் மதிக்கத்தக்க காலணி, எத்தனை பெரிய துயரத்தை, திருப்பத்தை, மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ளக் காரணமாகி விடுகிறது என்கிறதை யதார்த்தமான நிகழ்வுகளின் மூலம் இந்த நாவல் ஸ்தாபிக்கிறது. ஒரு அற்புதமான குழந்தைகளின் மனவுலகைக் காட்சிப்படிமமாய் இந்நாவல் பதிவு செய்கிறது. அதன் மூலம் உங்கள் நினைவுகளில் அவர்களுக்கு ஓர் நிரந்தர இடம் ஒதுக்கிக் கொடுக்கச் செய்து விடுகிறது.
குழந்தைகள் குழந்தைகளாகத் துல்லியமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கிற விசயமே இந்த நாவலின் தனிச்சிறப்பு. இரண்டு குழந்தைகளை மையமாக வைத்துக் கொண்டு இத்தனை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் ஒரு நாவல் இருக்க முடியுமா என்று நினைத்தால் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எனது வார்த்தை எத்தனை சத்தியம் என்று.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now