Home / eBooks / Cylinder Niraya Anbu
Cylinder Niraya Anbu eBook Online

Cylinder Niraya Anbu (சிலிண்டர் நிறைய அன்பு)

About Cylinder Niraya Anbu :

வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, பல்வேறு வார, மாத இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளின் தொகுப்பே "சிலிண்டர் நிறைய அன்பு".

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் சமூகப் பார்வையில் எழுதப்பட்ட கதைகளே அதிகம் இருந்தாலும், ஒன்றிரண்டு காதல் கதைகளும், குடும்ப கதைகளும் இடம் பெற்றிருப்பது இத்தொகுப்பின் சிறப்பு அம்சம். தலைப்புக் கதையான "சிலிண்டர் நிறைய அன்பு" சிறுகதையில் வீடு வீடாகச் சென்று சிலிண்டர் போடும் மனிதனுக்கும், அந்த வீட்டுக்காரர்களுக்கும் உள்ள உறவை உளவியல் ரீதியாக விளக்கம் கதை. பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் மனிதர்களுக்கு, சக மனிதர்களின் மேம்போக்கான உறவு மட்டுமே கிடைக்கும். உண்மையான அன்பு கிடைக்காது என்பதை பொட்டிலடித்தாற் போல் கூறும் கதை.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள "நாளைய வெளிச்சம்" சிறுகதை "கவிதை உறவு" மாத இதழ், சென்னை நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஒரு வாசகனின் மனதில், இதில் இடம்பெறும் ஏதேனும் ஒரு கதை நெகிழ வைத்தால் அதுவே இத்தொகுப்பின் முழுமையான வெற்றி, எனக் கொள்வேன்.

இவண்

முகில் தினகரன்

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books