Home / eBooks / En Kanmani Un Kaadhali
En Kanmani Un Kaadhali eBook Online

En Kanmani Un Kaadhali (என் கண்மணி உன் காதலி)

About En Kanmani Un Kaadhali :

ஆரம்பம் முதலே மோதலில் ஆரம்பிக்கும் சஞ்சய், பவன், சஞ்சனா அறிமுகம்.. நாயகனின் நண்பனைக் காதலித்து, இக்கட்டான ஒரு சூழ்னிலையில் அவனை மணமுடிக்கும் நாயகி.. திருமணமுடிந்த அன்றே கைவிட்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில், நண்பனுக்காக அவர்களை ஆதரித்து கைக்கொடுக்கும் நாயகன்.. நாயகிக்கு திருமணம் முடிந்த நிலையில், அதை அறியாத பெற்றவர்கள் பெண்ணுக்கு திருமண முடிக்க நினைக்க, விபத்தில் சிக்கிய கணவனோ வெளிநாட்டில் இருக்க.. வேறு வழியில்லாமல் வெளியே சொல்ல முடியாத நிலையில் நாயகி, நாயகனை மறு திருமணம் செய்ய.. தன் முதல் தாலியை மதித்து காத்திருக்கும் நாயகி..கரம் பிடித்தவனோ அவளுக்கு துணையிருக்க.. கட்டியவன் திரும்பி வந்தானா??.. காதலித்தவன் கட்டிய முதல் தாலிக்கும், நிர்பந்தத்தால் கரம் பிடித்தவன் கட்டிய மறு தாலிக்கும் இடையில் உழன்று போராடும் நாயகி சஞ்சனா..அவனின் கண்மணி மற்றொருவனின் காதலியாய் மாறிய விவரம் என்ன?..

அவசரக் கோலம் அள்ளித் தெளிர்த்தாற் போல.. 'என் கண்மணி உன் காதலி'.. விறுவிறுப்பான காதல் + குடும்பக் கதை.

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review