Home / eBooks / En Kannathil Un Vannathupoochi
En Kannathil Un Vannathupoochi eBook Online

En Kannathil Un Vannathupoochi (என் கன்னத்தில் உன் வண்ணத்துப்பூச்சி)

About En Kannathil Un Vannathupoochi :

தன் மனசுக்கு பிடித்தவன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் யோகிதா அழகும், படிப்பும், உயர்ந்த பதவியும் கொண்ட இளம்பெண். தனக்கு கீழே வேலைப் பார்க்கும் 'நந்தகேஷ்' என்ற இளைஞனைக் கண் மூடித்தனமாக விரும்புகிறாள்.

இருவரும் கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

எதிர்ப்பாராத விதமாய் குறுக்கிடும் 'கவுதம்' என்ற இளைஞனின் பேச்சை நம்பி யோகிதாவை தவிர்க்கிறான் நந்தகேன்.

யோகிதா எடுத்த அதிரடி முடிவே கதை. மனசுக்கு நெருக்கமானவர்களை எந்த சூழலிலும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது. வெளிப்படையாய் கலகலப்பாய் பேசினால். தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது.

இதுதான் மையக்கரு...

வாசியுங்கள் - இந்திரா நந்தன்

About Indira Nandhan :

குறுகிய காலத்தில் சொற்பமான நாவல்களே எழுதியிருந்தாலும், வாசகர்களுக்குப் பிடித்தமான நாவலாசிரியை ஆக மாறிவிட்டதில் பெரு மகிழ்ச்சி.

பி.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறேன். ஜி.எம். இந்திரா என்ற பெயரிலும் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருகிறேன்.

வாசிப்பது என்பது மனதை ஒரு நிலைப்படுத்தக் கூடியது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்.

இதனாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மனம் ஒரு நிலைப்படும்.

வாசிக்கும்போது தங்களுடைய பிரச்சனைகள், கவலைகளை மறந்து கதை கலத்தினுள்ளே எண்ணங்களை ஒருமுகப்படுத்துகிற போது இதயம் இலேசாகிறது.

விறுவிறுப்பான பொழுதுபோக்கான நிகழ்வுகளை யதார்த்தமான நடையில் தருவதுதான் என் வெற்றியின் காரணம். என் நாவல்களை மகிழ்ச்சியுடன் வாசியுங்கள்.

அன்புடன் உங்கள்

இந்திரா நந்தன்

Rent Now
Write A Review

Same Author Books