Home / eBooks / En Priyamulla Snehithanukku
En Priyamulla Snehithanukku eBook Online

En Priyamulla Snehithanukku (என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு)

About En Priyamulla Snehithanukku :

பிரியமுள்ள வாசகர்களுக்கு

இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாச் சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக் கொள்ளும் சிறுகதைச் செம்மல் உயர்திரு லா. ச. ரா. அவர்களை நன்றியறிதலோடு போற்றுவது தமிழ் மக்கள் கடமை. அவருடைய கதைகளை தமிழ் வாசகர்களுக்கு வழங்குவதே எங்கள் தலையாய கடமை என்று கருதி இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளோம். நூலாசிரியர் லா. ச. ரா. அவர்களுக்கும் பிரியமுள்ள தமிழ் வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.

About La. Sa. Ramamirtham :

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Rent Now
Write A Review

Same Author Books