Home / eBooks / Enakkagava Babu?
Enakkagava Babu? eBook Online

Enakkagava Babu? (எனக்காகவா பாபு?)

About Enakkagava Babu? :

1980களில் எஸ். வேதா என்ற பெயரிலும் அதற்குப் பின்பு வேதா கோபாலன் என்கிற பெயரிலும் சிறுகதைகளை எழுதிக் குவித்தவராக என் எழுத்தாள சகோதரிக்கு வாழ்த்துரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பை உண்மையிலேயே எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக நினைக்கிறேன். இதை நான் ஒரு சம்பிரதாயமாகக் கூறவில்லை.

ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் குமுதம், விகடன் போன்ற வார இதழ்களில் ஒரு சிறுகதை பிரசுரமானாலே, அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. எத்தனையோ எழுத்தாளர்கள் அரும்பாடுபட்டு அனுப்பி வைத்த சிறுகதைகள் எல்லாம் சுவரில் அடிபட்ட பந்துகளாக திரும்பி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வேதா கோபாலனின் கதைகள் மட்டும் குமுதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்க்கும்.

சில சமயங்களில் அது ஒருபக்கக் கதையாகவும், சில நேரங்களில் சற்றே பெரிய சிறுகதையாகவும் இருப்பதைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். பிறகு பல நாவல்கள் வரிசையாக வந்தன. பெரும்பாலும் குடும்பக் கதைகள் தான். ஒரு சிறிய சம்பவம், ஓர் அழகான, அன்பான குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை அற்புதமாக எடுத்துரைக்கும் வேதா கோபாலனின் ஒரு பக்கக் கதைகள் வாமன அவதாரமாகவும், சற்றே பெரிய சிறுகதைகள் விஸ்வரூபமாகவும் எனக்குக் காட்சியளித்தன. எல்லாக் கதைகளுமே எதார்த்தமாக ஆரம்பித்து கதையின் கடைசி வரிகள் படிப்பவர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்த காரணத்தால்தான் அவருடைய கதைகள் அன்றைக்கு வந்து கொண்டிருந்த எல்லா வார இதழ்களிலும் பிரசுரமான மகத்தான வெற்றியைப் பெற்றன.

ஒவ்வொரு பக்கமும் இலக்கிய வாசனையோடு மணக்கும். வாழ்த்துக்களோடு...

ராஜேஷ்குமார்

About Vedha Gopalan :

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books