ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை விளக்கும் நாவல்.
‘எங்கே அவள் என் தேவதை’
அன்பு என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். அப்பாவின் அன்பில் நனைந்து மகிழ்ந்தவள், அப்பாவுக்கு நல்லது செய்ய எண்ணுகிறாள். அவள் எண்ணம் நிறைவேறியதா... அன்பு கொண்ட அந்த நல்ல உள்ளம் நிறைவுடன் வாழ்ந்ததா... என்பதை உயிரோட்டமாக விளக்கும் நாவல் ‘எங்கே அவள் என் தேவதை’ அந்த தேவதை உங்கள் மனதிலும் இடம்பிடித்தாள் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now