விபத்தில் நினைவுகளை தொலைத்து வாழும் மகள் காணாமல் போக,
பேரனுடன் வாழ்க்கையை நடத்துகிறார் அவள் தந்தை.
நீண்ட வருடங்களுக்கு பின் காணாமல் போன மகளை காண்கிறார் தந்தை.
அம்மாவை அடையாளம் காண்கிறான் மகன் இருந்தும் வெளியே சொல்ல முடியாத சூழல்... பாசப்போராட்டம்... இதற்கிடையில் மகனின் காதல்... அது கைகூடியதா... இப்படி காதலும் பாசமும் கலந்த கதையை... எங்கிருந்தாலும் வாழ்க... என்ற நாவலில் உயிரோட்டமாக எழுதி இருக்கிறேன்.
படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now