Home / eBooks / Enna Malar
Enna Malar eBook Online

Enna Malar (எண்ணமலர்)

About Enna Malar :

கவிதை உள்பொருள், உத்திமுறை, உருவாக்குபவன், உருப்படுவன் (சுவைஞன்) என்ற உள்ளார்ந்த பொதுவமைப்வொட்டி அமைவது. முன்னவை மூன்றையும் விடப் பின்னதால் கவிதை மேன்மை அடைவதே உண்மை. உருப்படுபவன் என்பதன்கண் மாணாக்கரும் அடக்கம்.

ஒன்றைப் பயிலுதல், உணர்தல், தெளிதல், விளக்குதல் என்ற மாணாக்கரின் கருத்தோட்டப் பயிற்சிக்கு வழிகோல வேண்டும். மலரும் மணமும் போல விரிவடைதல் தேவை. இப்போக்கிலேயே இப்படைப்பு இருக்கக் காணலாம். தமிழுலகின் கருத்துக்கும், சொல்லுக்கும், உத்திக்கும் வரையறை இல்லை. இது ஒரு ஆரம்பப் படிக்கல்லே.

About Aroor R. Subramanian :

திரு. ஆர்.சுப்பிரமணியன், திருவாரூர் - விஜயபுரத்தில் 18.12.1940 அன்று பிறந்தார். இவரது தந்தை திரு. உமா மகேஸ்வரன் என்ற ஏ. இராமய்யர். பூர்வீகமாகத் திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தமாக திருவாரூரில் குடியேறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 4 ஆம் தொகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவகலகத்தில் இளநிலை உதவியாளராக (அப்போது லோயர் டிவிஷன் கிளார்க்) 1.6.1960 அன்று தனது 19 வயதே முடிந்த நிலையில் பணியில் சேர்ந்தார்.

அவர் சேர்ந்த துறை வருவாய்த்துறை. அத்துறையில் பல பயிற்சிகளும், பலதுறைத் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகளும் உண்டு. அவைகளை எல்லாம் குறுகிய காலத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார். அத்துறையில் வருவாய் ஆய்வாளர், உதவியாளர். தலைமை எழுத்தர், தலைமைக் கணக்கர், துணை வட்டாட்சியர், சிறப்பு நீதிபதி, வட்டாட்சியர், காஞ்சிபுரம் வரவேற்பு வட்டாட்சியர், (மீனம்பாக்கம் விமான நிலையம் உட்பட ) நிலமேலாளர், சிறப்புத் துணை ஆட்சியர், என்று துறையிலுள்ள எல்லா நிலைகளிலும் பணியாற்றி சென்னை, கலால் உதவி ஆணையராகப் பணியாற்றும் போது 31.5.1999 அன்று பணி நிறைவு ஓய்வு பெற்றார்.

Rent Now
Write A Review

Same Author Books