Yamuna
இக்குறுங்கதைகளின் தொகுப்பு, பெண்களின் உணர்வுகள் பற்றியது. சமூகத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி பெண்ணவளின் தேடல்கள் பற்றியது. ஆணுக்கு நிகரான அனைத்து உணர்வுகளும் ஆசைகளும் சக்திகளும் திறமைகளும் அவளுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது என்றும் அது ஆலகால விஷம் ஆகாமல் அமிழ்தமாய் உயிர் கொடுக்கப் புறப்பட்டால் நலம் என்றும் குறிப்பிடும் செய்தி இங்கே தரப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகள் முட்டுக்கட்டைகளாகி பெண்களை சீரழிக்கும நிலைகளும் சொல்லப்பட்டுள்ளது.
வாசியுங்கள். விமர்சியுங்கள்.
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.