தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாள தம்பதிகள் அமரர்கள் து.ராமமூர்த்தி மற்றும் சரோஜா ராமமூர்த்தியின் புதல்வர் ஜெயபாரதி.
எழுபதுகளில் தினமணிகதிரில் ஏராளமான சிறுகதைகள் எழுதி, பரபரப்புக்காளானவர். அப்பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர்.
தனது தந்தை ராமமூர்த்தி கணையாழியில் எழுதிய குடிசை சிறுகதையை, நன்கொடை வசூல் திட்டம் மூலம் தயாரித்து, இயக்கினார். ஸ்டுடியோவுக்கு வெளியே தயாரான முதல் படம் இது. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்துக்குப்பின் தமிழில் வெளிவந்த நியோ-ரியலிச படம் என்ற பாராட்டைப் பெற்றது. வருங்காலத் தலைமுறையினருக்கென புனேவில் உள்ள மத்திய திரைப்படக் காப்பகத்தில் இவரது குடிசை படமும் இடம்பெற்றுள்ளது.
ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா-நண்பா, குருஷேத்திரம் ஆகிய படங்களை எழுதி இயக்கினார்.
Rent Now