Home / eBooks / Ervadi S. Radhakrishnanin Short Stories
Ervadi S. Radhakrishnanin Short Stories eBook Online

Ervadi S. Radhakrishnanin Short Stories (ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் சிறுகதைகள்)

About Ervadi S. Radhakrishnanin Short Stories :

"ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறுகதைகள்” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு புதையல். வெவ்வேறு கோணங்களில் அமைந்துள்ள எடுத்துக்காட்டு கதைகள். மனிதனை மனிதனாக வாழத்தூண்டும் மகத்தான சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் கருவாக உள்ளன. வாழ்க்கை என்னும் அனுபவ ஓடையில் மலர்ந்துள்ள அர்ச்சனை மலர்கள் அவை.

“செலவு பண்ணினாலும் பரவாயில்லை வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி... இல்லேன்னா இட்லி சின்னது. காப்பிக்குச் சர்க்கரை போதாது. நெய் சுத்தமில்லேன்னு இந்தக் கதிரேசன் தினமும் கத்திட்டிருப்பான்” என்று எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட எடுத்த வேலையை செய்து முடிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறது. இது யதார்த்த வாழ்வின் படப்பிடிப்பு.

வீட்டு நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதால் ஏற்படும் அவலங்களைப் பட்டியல் போடுகிறது ஒரு கதை.

தெய்வத்தின் பேரால் திருவிழாவென்று பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதை விட ஒருவருடைய வாழ்க்கைக்கு உதவும் கல்விக்கு உதவுவது கோடி மடங்கு புண்ணியந்தரும் என்பது மற்றொரு கதை.

சமுதாயப் பணி என்கிற போர்வையில் வீட்டையும், குடும்பத்தையும், உறவுகளையும் புறக்கணித்துவிட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. குடும்பத்துக்குப் பின்னரே சமூகச் சேவை என்பது நல்ல வாழ்வியல் சிந்தனை.

தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தல் என்பது தீயவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுகமாக ஆதரவு அளிப்பது போலாகும் என்று ஒரு சிறுகதையில் சிறந்த குடிமக்களின் கடமை நினைவூட்டப்படுகிறது. இன்று தேர்தல் எந்திரத்தில் நோட்டாவை பயன்படுத்துவதுகூட அப்படித்தான்.

படித்துவிட்டு வேலை தேடி அலைவதை விட எந்த வேலையானாலும் படித்த அறிவைக் கொண்டு இன்னும் சிறப்பாகச் செய்து ‘செய்யும் தொழிலே தெய்வம்' என உழைக்க வலியுறுத்துகிறது ஒரு கதை. தொழிலுக்குத் தொழில் உத்திகள் மாறும் என்பது படிப்பினையாக உள்ளது.

மனிதர்கள் தவறலாம் மகான்கள் தவறக்கூடாது என்னும் படிப்பினை மூலம் ‘துறந்தவர்கள் எல்லாம் துறந்தவரா' என்னும் வினாவாகி நிற்கும் பாதிரியாரைப் படம் பிடிக்கக் காணலாம்.

"வாழ்ந்து முடிஞ்ச நிறைவோட சாவிலே கூட நாம் சேர்ந்ததே போயிடலாம்" என்று மறைந்த கணவனைக் கட்டிக் கொண்டு மனைவி கோதாவரியில் ஜலசமாதி ஆகும் கதை கண்ணீர்க் காவியம். திரைப்படமாகும் தரமுடைய கதை.

நல்ல வீட்டு வேலைக்காரர்கள் கிடைத்துவிட்டால் அவர்கள் விட்டுச் செல்லாத வகையில் ஈர்ப்புடையவர்கள் போல காட்டி உழைப்பைச் சுரண்டும் வீட்டு சொந்தக்காரர்களை வெளிச்சம் போடுகிறது ஒரு கதை.

"மூன்று பேராகப் போகிறோம் என்று மனைவியை முழுகாமல் பார்க்க ஆசைப்பட்டவனுக்கு அவள் முழுகாமலேயே மூன்று பேராகினர் அவள் தம்பியின் வருகையால்" என்னும் நளினமான நடைச்சித்திரம் சிந்தனைக்கு விருந்து. நகைச்சுவை விருந்தும்கூட.

"தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறு வேறுதான்” என்பதைப் போல தந்தையானாலும் மகனானாலும் ஒருவர் உதவியை ஒருவர் பெறக்கூடாது என்ற மனஉறுதியோடு வாழும் தந்தை மகனைக் காட்டுவது ‘வைராக்கியம்'.

- முனைவர் குமரிச் செழியன்

About Kalaimamani Ervadi S. Radhakrishnan :

நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.

96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.

கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.

ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.

புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.

Rent Now
Write A Review

Same Author Books