மனமே துணைவன். மனமே பகைவன். எண்ணங்களே மனம். தன்னளவில் மனம் என்பது அபூர்வமான சக்தியாக இருந்தாலும், எண்ணங்களின் தரமே மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது. அதனால்தான், மனிதர்களில் நன்மனம் கொண்டோரும், புன்மனம் கொண்டோரும் காணப்படுகிறார்கள். தீய எண்ணங்களை ஒதுக்கி, நேய எண்ணங்களை வளர்த்து, மனதால் பந்தாடப்படாமல், மனதைத் தனது வசத்துக்குக் கொண்டு வந்தவர்களே மாமனிதர்கள். அப்படிப்பட்ட மனங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.
-ஆரூர் ஆர். சுப்பிரமணியன்
திரு. ஆர்.சுப்பிரமணியன், திருவாரூர் - விஜயபுரத்தில் 18.12.1940 அன்று பிறந்தார். இவரது தந்தை திரு. உமா மகேஸ்வரன் என்ற ஏ. இராமய்யர். பூர்வீகமாகத் திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தமாக திருவாரூரில் குடியேறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 4 ஆம் தொகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவகலகத்தில் இளநிலை உதவியாளராக (அப்போது லோயர் டிவிஷன் கிளார்க்) 1.6.1960 அன்று தனது 19 வயதே முடிந்த நிலையில் பணியில் சேர்ந்தார்.
அவர் சேர்ந்த துறை வருவாய்த்துறை. அத்துறையில் பல பயிற்சிகளும், பலதுறைத் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகளும் உண்டு. அவைகளை எல்லாம் குறுகிய காலத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார். அத்துறையில் வருவாய் ஆய்வாளர், உதவியாளர். தலைமை எழுத்தர், தலைமைக் கணக்கர், துணை வட்டாட்சியர், சிறப்பு நீதிபதி, வட்டாட்சியர், காஞ்சிபுரம் வரவேற்பு வட்டாட்சியர், (மீனம்பாக்கம் விமான நிலையம் உட்பட ) நிலமேலாளர், சிறப்புத் துணை ஆட்சியர், என்று துறையிலுள்ள எல்லா நிலைகளிலும் பணியாற்றி சென்னை, கலால் உதவி ஆணையராகப் பணியாற்றும் போது 31.5.1999 அன்று பணி நிறைவு ஓய்வு பெற்றார்.
Rent Now