Home / eBooks / Ganga Snanam Aacha
Ganga Snanam Aacha eBook Online

Ganga Snanam Aacha (கங்கா ஸ்நானம் ஆச்சா?)

About Ganga Snanam Aacha :

எவ்வளவுதான் நவீனமாகட்டும், கம்ப்யூட்டர், சாடிலைட் யுகமாகட்டும், இந்துப் பண்டிகைகளைப் பொறுத்தவரை கொண்டாட்டத்திற்கு மட்டும் குறைவிருந்தததில்லை. அவற்றில் தீபாவளியை ஒரு முழுமையான கொண்டாட்டமாகவே குறிப்பிடலாம். தலைக்குக் குளித்து, புத்தாடை அணிந்து, வகைவகையான பலகாரங்கள் உட்கொண்டு, பட்டாசு வெடித்து.... வேறு எந்த பண்டிகையும் இத்தனை முழுமையாக அமைவதில்லை! இத்தனைக்கும் தீபாவளி தினத்தன்று தனிப்பட்ட பூஜை என்று எதையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஒரு சமுதாயப் பண்டிகையாக மேற்கொள்ளப்படுவதால், அன்று கோயிலுக்கும், அக்கம் பக்கத்து உறவினர் அல்லது நண்பர்கள் வீடுகளுக்குப் போய் வருவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தன் வீட்டுக்கு முன்னால் தான் வெடித்திருக்கும் பட்டாசுகள் குப்பையை பிற வீட்டுக் குப்பைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிறு பிள்ளைகள் மகிழவோ அவ்வது சற்றே ஏக்கமுறவோ செய்யும் பண்டிகை இது. சில இடங்களில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து காசு போட்டு தெருவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நீளமாக 'தவுஸன்ட் வாலா'வை வெடித்து மகிழ்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகையும் இதுதான். அலுவலக நண்பர் குழுவிலோ அல்லது பிற இடத்திலோ மாதாந்திர சீட்டு கட்டி, தீபாவளி சமயத்தில் அதன் முதிர்ச்சியாகக் கிடைக்கும் இனிப்புகள், துணிகள், தங்கக் காசு மற்றும் பட்டாசுகளால் நடுத்தர வர்க்கத்து மக்களை சந்தோஷப்பட வைக்கும் பண்டிகை இது.

ஆனால், இத்தனை கோலாகலமான, அதேசமயம் விரத சம்பிரதாயம் எதுவுமில்லாத தீபாவளிக்குப் பின்னால் எத்தனை அபூர்வ விஷயங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன, தெரியுமா? ஒவ்வொன்றாகப் பார்ப்போமா? அவற்றையும் தீபாவளி கொண்டாட்ட நீரோட்டத்திலேயே பார்க்கலாம்.

About Prabhu Shankar :

அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

Rent Now
Write A Review

Same Author Books