சிறு வயதிலிருந்தே எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நதியைப் பற்றி என் தந்தை விவரமாகக் கூறுவார். பூகோள அமைப்புகளையும் வரைபடத்தில் காண்பிப்பார்.
புதுதில்லியில் பிறந்து வளர்ந்த எனக்கு யமுனை நதி மிகவும் பிடிக்கும் என்றாலும், கங்கை நதி மீது ஒருவித பிரமிப்பு உண்டு.
சில இடங்களில் ஆரவாரமாக ஓடி, சில இடங்களில் அமைதியாக நடந்து, ஒருசில இடங்களில் ‘ஹோ’ என்று ஆர்ப்பாட்டமாகக் குதிக்கும் கங்கையை மறக்க இயலாது.
உலகின் பல நாடுகளுக்குச் சென்றாலும், எகிப்தில் உள்ள நைல் நதி என்னைக் கவர்ந்தது. எகிப்து நாட்டில் ஏழு ஆண்டுகள் வாழும் ஓர் சந்தர்ப்பத்தில் நைல் நதியைப் பற்றி பல விஷயங்கள் அறிந்தேன்.
சிந்து நதி கலாசாரம், நைல் நதி கலாசாரம் இவை இரண்டும் மிகத் தொன்மையானது.
- காந்தலட்சுமி சந்திரமௌலி
சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Rent Now