Home / eBooks / Gopura Dharisanam
Gopura Dharisanam eBook Online

Gopura Dharisanam (கோபுரத் தரிசினம்)

About Gopura Dharisanam :

ஆர்.எம்.ஜி மிகவும் பரந்த மனம் உடையவர். எல்லோருக்கு உதவி செய்பவர். அவர் அப்பாவின் இரண்டாவது மனைவி வனஜாவின் மகன் யோகேஷ், சுயநலமாகவே வாழ்பவன். அவர்களை ஆர்.எம்.ஜி அவர் வீட்டிலேயே வாழ வைக்கிறார்.

ஆர்.எம்.ஜி யை சிறுவயதிலிருந்தே வளர்த்த மனோம்மா, அவர் மகன் ரவிக்குமார் அங்கேயே ஆர்.எம்.ஜி யின் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆர்.எம்.ஜி ஒரு ஏழைப்பெண்ணை, திக்கித் திக்கிப் பேசும், திவ்யாவைத் திருமணம் செய்து கொள்கிறார்.

யோகேஷ், பணத்திமிர் பிடித்த தாரணியைத் திருமணம் புரிகிறான். தாரணியின் அம்மா, புவனா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கும் தியாகு, ஆர்.எம்.ஜி யின் மாமனாரா என்று, புவனாவும் தாரணியும் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

ஆர்.எம்.ஜி எல்லாம் தெரிந்தும், மனோம்மா புவனா குடும்பத்தைப்பற்றி எச்சரித்தும், குடும்ப ஒற்றுமைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார். திவ்யாவும், தாரணியும் ஒரே நேரம் கர்ப்பமாகி, பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் தாரணி பிரசவம் பிரச்சனையாகிறது. அவள் குழந்தை இறந்துவிடுகிறது.

அவள் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலையில், மனோம்மாவுக்கும், நர்சுக்கும் தெரிய, தாரணியின் இறந்த குழந்தையை, திவ்யாவிடம் வைத்துவிட்டு, ஆர்.எம்.ஜி அவர் பெண் குழந்தையை, தாரணிக்குப் பிறந்ததென்று சொல்கிறார்.

திவ்யா இந்த உண்மை தெரியாமல் கலங்குகிறாள். அவள் பெற்ற குழந்தைக்கு, கௌதமி என்று பேர் வைக்கிறார்கள். கௌதமியை திவ்யா தூக்கிக் கொஞ்சமுடியாதபடி, தாரணி செய்கிறாள்.

ஒருநாள் சிறைக்குச் சென்று, ஆர்.எம்.ஜி ராமதுரை என்பவரைச் சந்திக்கிறார். அவர் சில விஷயங்களை ஆர்.எம்.ஜி யிடம் சொன்னார். அடுத்த சிலநாட்களில் சுகந்தி என்ற பெண்ணை, ஆர்.எம்.ஜி வீட்டிற்குக் கூட்டி வந்தார். அவள் வந்ததிலிருந்து பல பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தன. சுகந்திக்கு பல மாப்பிள்ளைகள் பார்த்தும், திருமணமாகாத நிலையில், அவளை மனோம்மா மகன் ரவிக்குமாருக்கு, திருமணம் செய்து வைத்தார்.

ரவிக்குமாரோ யோகேஷிடம் சேர்ந்து கொண்டான். சுகந்தி ஆர்.எம்.ஜி சகோதரர் என்றால், அவனுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுத்தால் தான், முதலிரவு என்று கூறினான்.

மனோம்மா அவனை மகன் என்றும் பாராமல் திட்டினாள். இப்படியான சூழ்நிலையில், ஆர்.எம்.ஜி அவர் குடும்பத்தினருடன் மனோம்மாவைக் கூட்டிக்கொண்டு, அந்த பங்களாவை விட்டு வெளியேறி, திவ்யாவின் அப்பா தியாகுவின் சாதாரணா வீட்டில் குடியேறினார்.

காலம் வளர்கிறது.

கௌதமி பெரியவளாகி திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. அதற்கு அவளைப் பெற்ற ஆர்.எம்.ஜி, திவ்யாவுக்கு அழைப்பு இல்லை. கௌதமிக்கு, அவள் பெற்றோர்கள் ஆர்.எம்.ஜி, திவ்யா என்று தெரிந்தது.

அவள் என்ன முடிவு எடுத்தாள்?. ஆர்.எம்.ஜி மீண்டும் செல்வந்தர் ஆனாரா?.

முதலிரவு அன்று சுகந்திக்குச் சொத்தைப் பிரித்துத் தரச்சொன்ன ரவிக்குமார் சொன்ன பதில் என்ன?. எல்லோருக்கும் நல்லவனாய் வாழ்ந்த ஆர்.எம்.ஜி யின் கதை இது.

About Karaikudi Narayanan :

ஊர்பெயரை தன்னுடன் இனைத்து ஊருக்கும் பெருமை சேர்த்தவர். திரையுலகின் ஜாம்பவான்களான திரு.பீம்சிங் அவர்களிடம் 1967 ல் திரு.ஜெமினிகணேசன், P.பானுமதிம்மா, நடித்த பட்டத்துராணி என்ற பட்த்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், திரு.ஜாவர் சீதாராமன் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்தவயர்.

திரு.A.C.திருலோகசந்தர் அவர்களால் 1971 ல் திரு.முத்துர்மன், K.R.விஜயா, பிரமீளா, சொந்தம் திரைப்படம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி நமக்கு சொந்தமானவர். 1977 அச்சாணி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். திரு.முத்துராமன், திருமதி.லட்சுமி, ஷோபா அறிமுகம்.

AVM ன் செல்லப்பிள்ளை... இன்று பேர் சொல்லும் பிள்ளை...

திரு.மேஜர் சுந்தர்ராஜன் திரு.சிவக்குமார் திரு.ஶ்ரீகாந்த் திரு.ரவிச்சந்திரன் திரு.விஜயகுமார் திருமதி.மஞ்சளா திருமதி.பிரமீளா ஆகியோருக்காக 28 மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என்று அனைத்து மொழிகளிலும் 29 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 9 படங்களை தயாரித்து, இயக்கியவர்.

இவரிடம் இருந்த உதவியாளர்கள் இயக்குநர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர்களாக, திரையுலகில் வெற்றி பெற்றவர்கள்... திரு.ராஜசேகர் திரு.இராமநாராயணன் திரு.M.A. காஜா, திரு.ராமராஜன் திரு.ரமேஷ்கண்ணா திரு.கஜேந்திரகுமார் திரு.எழுச்சூர் அரவிந்தன் ஆகியோர்.

தமிழக அரசின், கேரள அரசின், மாநில விருதுகளைப் பெற்றவர். மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றவர்.

இன்றும் SWAN ல் கதைகளை பதிவுசெய்து வருபவர். SWAN ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த சாதனையாளர், முன்னோடி, திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நல்ல மனிதர், மரியாதைக்குரிய திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நீண்ட ஆயூளுடன், நல்ல ஆரோக்யத்துடன், பல்லாண்டுகள் வாழ, குடும்பத்தில் பெரியவர்களை வணங்கிப் போற்றுவது போல், திரைக்குடும்பத்தில் இவரைப் போன்ற முன்னோடிகளை வணங்கிப் போற்றி பிராத்திப்போம்...

சி.ரங்கநாதன்.

Rent Now
Write A Review

Same Author Books