Home / eBooks / ‘Gopu’win Chinna Chinna Kathaigal
‘Gopu’win Chinna Chinna Kathaigal eBook Online

‘Gopu’win Chinna Chinna Kathaigal ('கோபு'வின் சின்னச் சின்னக் கதைகள்)

About V. Gopalakrishnan :

திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.

2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.

02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.

இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html

மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.

சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.

Rent Now
Write A Review

Rating And Reviews

  THENAMMAI LAKSHMANAN

தாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்கும் எப்போதும் என்னோடு. https://honeylaksh.blogspot.com/2016/05/blog-post.htmlகுடும்பத்தினர் அனைவருமே படிக்க ஏற்ற நூல்கள் என்பது இதன் அதி சிறப்பு.குடும்பத்தினர் அனைவருமே படிக்க ஏற்ற நூல்கள் என்பது இதன் அதி சிறப்பு.

  வே.நடனசபாபதி

தொகுப்பின் தலைப்பு சின்ன சின்ன கதைகள் என்று இருந்தாலும் ஒவ்வொரு கதையும் பெரிய பெரிய விஷயங்களை உள்ளடக்கியிருக்கின்றன என்பது தான் நிஜம். கதாசிரியர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்!

  Poonthalir

இதில் மொத்தம் 20 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் படிக்க 10 நிமிடங்கள் ஆகின்றன. அனைத்தும் அருமையோ அருமையாக உள்ளன. பெரும்பாலான கதைகளில் நகைச்சுவை தூக்கலாக உள்ளன. உடையாத இளம் நொங்கு சீவி அதன் ஸ்வீட் தண்ணீருடன் ருசிப்பது போல உணர முடிந்தது.

  ஞா,கலையரசி

இந்நூலாசிரியரின் சிறப்பான கதைகள் என்ற தொகுப்புக்கு எழுத வேண்டிய பின்னூட்டத்தைத் தவறுதலாக இதற்கு எழுதிவிட்டேன். இந்நூலை வாசித்த பிறகு என் கருத்தைத் தெரிவிப்பேன். தவறுக்கு வருந்துகிறேன்.

  ஞா,கலையரசி

தலைப்பிற்கேற்றாற் போல், மிகச் சிறப்பான கதைகள்: படு சுவாரசிய மான கதைகளும் கூட. சுனாமியில் பெற்றோரை இழந்து, அனாதையான குழந்தையின் கதையைச் சொல்லும் ‘தாயுமானவள்,’ என்னை மிகவும் கவர்ந்தது. ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’, ‘அஞ்சலை,’ ஆகியவையும், மனதைத் தொடுகின்றன. நகைச்சுவை எழுத்தில் இந்நூலாசிரியர் கைதேர்ந்தவர் என்பதற்கு எடுத்துக்காட்டு:-‘வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ,’ என்ற கதை. இக்கதாநாயகன் வழுவட்டை ஸ்ரீனிவாசன் பற்றிப் படிப்பவர் அனைவருக்கும், சிரித்துச் சிரித்து வயிற்றுவலி வரு

  girija

Each and every story is a gem. .on the whole the reader will really feel the hilarious dialogues and thoughts. .that will make him or her feel which they would have come across in their daily life. And many aspects in the story are picked up from the real life of the author..must read. ..And I recommend this book to be read by all ages ...