Home / eBooks / 'Gopu'win Pokishangal
'Gopu'win Pokishangal eBook Online

'Gopu'win Pokishangal ('கோபு'வின் பொக்கிஷங்கள்)

About V. Gopalakrishnan :

திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.

2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.

02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.

இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html

மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.

சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.

Rent Now
Write A Review

Rating And Reviews

  jayashree

'பொக்கிஷம்' தலைப்புடன் கூடி நிஜமான பொக்கிஷமாக பெரியவாளிடம் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் உணர்ந்து ஆத்மார்த்தமாக எழுதியதை படித்ததும் மனம் ஸ்தம்பித்துப் போனது....என்பதே நிஜமான வார்த்தை. இதை படிக்க , அவரது பாதுகைகளைக் காண பூர்வ ஜென்ம புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். அனைவரும் இந்தப் பொக்கிஷத்தை படித்துப் பாதுகாத்திடல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.பரிசு பொக்கிஷத்திற்கு மிக்க நன்றி கோபு ஸார் .

  இராய செல்லப்பா

தனிமனிதன் தனது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் விதமாக, தான் சேகரித்த பல பொருட்களை படத்தோடு விளக்குகிறார் ஆசிரியர். பூசைப் பொருட்கள் முதல் பொன் வெள்ளியும் இதில் அடங்கும். இவ்வளவு நாட்களாக எப்படிப் பாதுகாத்தார் என்று வியப்பு உண்டாகிறது.

  Poonthalir

இதுபோன்ற மிகச்சிறப்பான, ஜனரஞ்சகமான எழுத்தாளர் ஒருவர் நமக்கெல்லாம் கிடைத்திருப்பதே ஓர் மிகச்சிறந்த பொக்கிஷமாகும். இவர் ’பொக்கிஷம்’ என்ற தலைப்பினில் எழுதியுள்ள இந்த நூலை அவசியமாக அனைவரும் படிக்க வேண்டும். தனக்கான சோதனைகளையெல்லாம் சாதனையாக்கி முன்னுக்கு வந்துள்ளவரின் வாழ்வியல் வரலாற்று நூலாகவே இது அமைந்துள்ளது.