Home / eBooks / Gramathu Raatinam
Gramathu Raatinam eBook Online

Gramathu Raatinam (கிராமத்து ராட்டினம்)

About Gramathu Raatinam :

இது என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்த 'கிராமத்து ராட்டினம்’ உங்கள் மனதிலும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்திச் சுழலும் என்று நம்புகிறேன். இதிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. பெண்மையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுபவை.

ஒரு விஷயம் அரசியலாக்கப்படும்போது, தனி மனிதர்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஒரு சிலரின் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்தபோது ஜனித்ததுதான் 'பதுங்கி இருக்கும் பாம்புகள்', அலுவலகத்துக்குள் நடக்கும் பதவிப்போட்டி, நகர வாழ்க்கையின் அவசரத்தில் தொலைந்து போன மனிதம், தங்களின் பேராசையால் இளந்தளிர்களின் பிஞ்சு, மனதை குத்திக் கிழிக்கும் பெற்றோர்- என்று தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சம்பவங்களே என் கதைக்கான களங்கள்.

இந்த சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு, என் மனப்பூர்வமான நன்றிகள், சிற்பி எங்கள் ஊர்க்காரர் மட்டுமல்ல, என் மரியாதைக்குரிய ஆசிரியரும்கூட. என்னுடைய இலக்கிய ஆர்வத்துக்கு, சிற்பியின் கவிதைகளும், சொற்பொழிவும் உரமிட்டன என்றால் அது மிகையில்லை.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரியில் பி.காம்படிக்கச் சேர்ந்தபோது, சிற்பி எனக்குப் பேராசிரியராக வரவேண்டும் என்பதே என் வேண்டுதலாக இருந்தது. ஆனால் நான் அங்கு சேர்ந்த நேரம், அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றச் சென்றுவிட்டார். அதில் எனக்கு அளவில்லாத ஏமாற்றம். ஆனாலும், எங்கள் ஊரில் நடைபெறும் சிற்பியின் கவியரங்கங்கள், இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று அவரது பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருப்பேன். என்னுடைய சிறுகதைகளுக்கு அணிந்துரை எழுதித்தர அவரை அணுகியபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அணிந்துரை கையில் கிடைக்கும்வரை, தேர்வு எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவியின் மனநிலையில் இருந்தேன். அணிந்துரையைப் படித்ததும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிம்மதி ஏற்பட்டது.

அன்புடன்,
ஜி.மீனாட்சி

About G. Meenakshi :

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை' போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதை 2009-ல் பெற்றவர். அகில இந்திய அளவிலான விருது இது. இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடல் பெற்றவர்.

`கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்' என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் 2016-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் `அன்று விதைத்த விதை' என்ற இவரது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. சாகித்ய அகாடமி சார்பில் நடத்தப்படும் பல்வேறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

`பேசும் ஓவியம், `பரிசலில் ஒரு படகு', `நீ உன்னை அறிந்தால்', `மல்லிகாவின் வீடு' போன்ற சிறுவர் சிறுகதை நூல்கள், `பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்' என்ற நேர்காணல் நூல், `மனமே மலர்ச்சி கொள்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். தினமணி கதிர், கல்கி, தினமலர், மங்கையர் மலர், கவிதை உறவு, கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Rent Now
Write A Review

Same Author Books