தமிழ்மொழியின் ஒப்புயற்வற்ற நூல் திருக்குறள். மனித இனம் முழுமைக்கும் பயன்தரும் வண்ணம் திருவள்ளுவர் இதைப் படைத்துள்ளார்.
வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாக நான் கருதும் குறட்பாக்களை (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) இந்நூலில் தொகுத்து அளித்துள்ளேன்.
‘Thirukkural’ is the eminent book of Tamil Language. Thiruvalluvar has created it as useful to the whole human race.
According to my view, I have compiled couplets (with English translation) in this book which are very essential for life.
அரு. அருள்செல்வன் 1961இல் பிறந்தவர். இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டத்தில் உள்ள இராயகிரி கிராமம். சிவகங்கை மாவட்டம்இ காரைக்குடியில் படித்து வளர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் தெய்வத்திரு.அன்பு-அருணாசலம்இ வேலுமயில் அம்மாள். தந்தையார் தமிழாசிரியராக இருந்து தமிழ்ப்பணி ஆற்றியவர். செட்டிநாடு பகுதி ஊர்களில்; பாவேந்தர் பாரதிதாசன்இ கவிஞர் கண்ணதாசன் முதலியவர்களை அழைத்து வந்து இலக்கியக் கூட்டங்களை சிறப்பாக நடத்தியவர். தந்தையார் மூலம் தமிழார்வம் பெற்ற அருள்செல்வன் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கி பின் கட்டுரைஇ சிறுகதைஇ நாடகம் எனப் பல வகையிலும் தன் எழுத்துப் பணியை தொடர்ந்து வருகிறார். இவருடைய படைப்புகள் இதழ்கள்இ வானொலிஇ தொலைக்காட்சி வாயிலாக வெளிவந்துள்ளன. இதுவரை இவர் எழுதிய பத்து நூல்கள் வெளிவந்துள்ளன.
Rent Now