Home / eBooks / Harshavardhanar – Part 1
Harshavardhanar – Part 1 eBook Online

Harshavardhanar – Part 1 (ஹர்ஷவர்த்தனர் - பாகம் 1)

About Harshavardhanar – Part 1 :

வடபாரதத்தில் மெளரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக; வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் “பரமபத்தாரக மகாராஜாதி ராஜர் என்றழைக்கப்பட்ட “ஹர்ஷவர்த்தனர்” ஆவார். இவர் தான் வர்த்தனராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை “ஹர்ஷவர்த்தனர்” சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை “ஹர்ஷவர்த்தனர்” தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனராஜ்ய மன்னராக முடிசூட்டிக்கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு - பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.

சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப்போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒருபக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும். வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல. “ஹர்ஷவர்த்தனர்” வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான். அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என்மனம் ஒப்பவில்லை. இனிகதைக்குள் நுழையலாம்! வாருங்கள்.

About M. Madheswaran :

பிரபல ஜோதிட நூலாசிரியர்; ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆத்தூர் மு. மாதேஸ்வரன் அவர்கள் ஜோதிடத்துறையில் 1985 முதல் சிறந்த ஜோதிடராக உள்ளதுடன் 40 ஜோதிட நூல்கள் எழுதியுள்ளவர் என்பதுடன் பல ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளவர். பல மாணவர்கள் – சீடர்களை கொண்டுள்ள நிலையில் பல ஜோதிடர்களை உருவாக்கியுள்ளவர்.

1980 களில் எழுத்தாளர் எனும் அளவில் சிறுகதைகள் - சமூக நாவல்கள் – சரித்திர நாவல்கள் என்று எழுதி வார – மாத இதழ்களில் வெளியாக முயற்சித்தவர். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தை முறைப்படி விதயாபீடம் மூலமாகப் படித்து தேர்ச்சி பெற்று 1985 முதல் ஜோதிடத்தை முழுநேர தொழிலாக செய்து கொண்டு வருபவர். எதிர்பாராமல் ஜோதிட நூல்கள் எழுத வேண்டிய சந்தர்ப்பம் ஏற்ப்பட்டதால் எழுத்துத்துறை திசைமாறி ஜோதிட நூலாசிரியர் என்று 1987 முதல் வரிசையாக இடைவிடாது தொடர்ந்து 40 ஜோதிட நூல்கள் எழுதி நல்ல வரவேற்பை பெற்று சிறந்த ஜோதிட நூலாசிரியர் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது.

நான் 1985ல் எழுதிய நாவல்களில் தலைசிறந்த நாவல் வடபுலத்து சக்கரவர்த்தி “ஹர்ஷவர்த்தனர்” சரிதமாகும். மூன்று பாகங்கள் கொண்ட “ஹர்ஷவர்த்தனர்” சரித்திர நாவல் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது முதன்முதலாக “புஸ்தகா டிஜிட்டல் மீடியா” மூலம் Ebook ஆக வெளிவந்துள்ளது. வாசகர்கள் வரவேற்பின் மூலம் மேலும் தொடர்ந்து நாவல்கள் வெளிவரும் என்று நம்புகிறேன். அன் நாவல்களை வெளியிட அன்புடன் முன் வந்த புஸ்தகா டிஜிட்டல் மீடியாவுக்கும் அன்பான நன்றி தெரிவிப்பதுடன், இந்த நாவல்கள் இத்துணை ஆண்டுகள் கழித்து வெளியாகத் துணையிருந்த என் மாணவர் சென்னை சுசீந்திரன் மற்றும் அவர் மூலமாக அறிமுகமாகி துணை செய்த குமுதம் குரூப் ஆசிரியர் திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  Radha

Book Review  S.RAJENDRSN

Marvei work

Book Review  Arul K

மிகச் சிறந்த வரலாற்று படைப்பு... உங்களின் பன்முகத் திறன் வியக்க வைக்கிறது. ஐயா, தாங்கள் நீடு வாழ இறை சக்தி அருள் புரிய வேண்டுகிறேன்.

Book Review  G Sivakumar, Dharmapuri

The author is my uncle and I know his capacity to write this kind of epic right from 1980. I wish him best of luck for the success of this novel.

Same Author Books